வட கிழக்கு மாநிலங்களைக் கை கழுவியவர் நேரு: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

வட கிழக்கு மாநிலங்களைக் கை கழுவியவர் நேரு: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

ல்லையில் அருணாச்சலப் பிரதேச விவகாரங்களில் சீன நடவடிக்கைகளைக் கண்டு எவ்வித எதிர்வினையும் ஆற்றாமலிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் "மௌனம்" குறித்து காங்கிரஸ் காட்டமாகக் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் சில கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக் கிழமை பெங்களூருவில் காங்கிரஸுக்கு பதிலடி கொடுத்தார், இன்று மோடியைக் கேள்வி கேட்கும் காங்கிரஸுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை, அன்று நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வடகிழக்குப் பிராந்திய விவகாரங்களைக் கையாள முடியாமல் கை கழுவியர் தானே! என்று கூறினார்.

1962 ஆம் ஆண்டில், முழு வடகிழக்கு பகுதியும் "தங்கள் சொந்த விதியை தங்களுக்குத் தாங்களே சந்தித்து முடிவுகளைத் தீர்மானிக்கும் படியாக அனாதரவாக விடப்பட்டது" அன்று நமது சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு  அப்பகுதிகளை முழுவதுமாகக் கை கழுவி விட்டார். இதை ராகுல் காந்தி அறிவாரா? என்றார் நிர்மலா சீதாராமன்.

"சீனர்கள் அருணாச்சலப் பிரதேசத்திற்குள் வருவதை நாங்கள் தடுத்துவிட்டோம். நாங்கள் பேசத் தேவை இல்லை. எங்கள் நடவடிக்கை  பேசுகிறது. எனவே அவர்கள் (காங்கிரஸ்) 'ஐயோ, பிரதமர் பேசவில்லை' என்று முடிந்தவரையில் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், ராகுல் காந்தி இந்த விஷயத்தைப் பற்றி சரி பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாட்டின் முதல் பிரதமர், நமது முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு இதே போன்றதொரு தருணத்தில் வடகிழக்கு மாநிலங்களைப் பற்றி என்ன சொன்னார் என்பதை அவர் சரி பார்க்க வேண்டும்என்று நான் விரும்புகிறேன். வடகிழக்கு மாநிலங்களை நான் கை கழுவுகிறேன் (நிர்க்கதியாகக் கைவிடும் நிலை) என்று தானே அவர் சொன்னார். -என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.

பெங்களூருவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தான் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"நீங்கள் அருணாச்சல பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் சில பகுதிகளுக்கு பயணம் செய்தால், அங்கு மக்களே சொல்வார்கள். அருணாச்சல பிரதேச மக்கள் எப்போதும் போல இந்தியாவில் நிலையாக இருப்பார்கள் ஆனால், அங்கு ஆக்ரமிப்பில் ஈடுபடும் நினைப்பில் ஊடுருவும் ஒவ்வொரு சீனரும் வெளியேற வேண்டியிருந்தது," என்று மத்திய அமைச்சர் கூறினார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் பல இடங்களின் பெயரை சீனா மாற்றியதற்கு காங்கிரஸ் செவ்வாயன்று கடும் ஆட்சேபனை தெரிவித்தது, மேலும் இது அண்டை நாட்டிற்கு மோடியின் "கிளீன் சிட்" மற்றும் எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து அவரது "சொல்வார்ந்த மௌனம்" ஆகியவற்றின் விளைவு என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இவ்விவகாரத்தில் இந்தியப் பகுதிகளுக்கு சீனா மறுபெயரிடுவதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தது, அருணாச்சல பிரதேசம்  இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும்,  அங்கு சில பகுதிகளில் ஊடுருவி ஆக்ரமிப்பை நிகழ்த்தி அவற்றுக்கு "கண்டுபிடிக்கப்பட்ட" பெயர்களை வழங்குவது இந்த யதார்த்தத்தை மாற்றாது என்றும் இந்தியா வலியுறுத்தியது.

திபெத்தின் தெற்குப் பகுதி என்று அண்டை நாடான அருணாச்சலப் பிரதேசத்தில் மேலும் 11 இடங்களுக்கு சீனப் பெயர்களை பெய்ஜிங் அறிவித்ததற்குப் பதிலாக  புது தில்லியின் எதிர்வினை மேற்கண்டவாறு வெளி வந்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com