“பாலங்கள் கட்டுவதில் நாயகர்” நிதின் கட்கரி ஓரு பார்வை!

“பாலங்கள் கட்டுவதில் நாயகர்” நிதின் கட்கரி ஓரு பார்வை!

நிதின் ஜெய்ராம் கட்கரி, இந்திய அரசியல்வாதி. தற்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞாசாலைத்துறை, கப்பல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக இருக்கிறார்.

1957 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி மே 27 ஆம் தேதி நாக்பூரில் பிறந்தார் நிதின் ஜெய்ராம் கட்கரி. நாக்பூர் பல்கலையில் எம்.காம் முடித்த அவர் பின்னர் எல்.எல்.பி. பட்டம் வென்றார். இளம் வயதில் பா.ஜ.க. இளைஞர் அணியிலும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் மாணவர் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.1979 இல் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தில் (ஏபிவிபி) விதர்பா பகுதியின் செயலாளராக இருந்தார். அப்போது 28-வது மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார்.

1981இல் பா.ஜ.க. இளைஞர் அணியின் நாக்பூர் நகர தலைவராக நியமிக்கப்பட்டார். 1985 இல் பா.ஜ.க.வின் நாகப்பூர் நகர செயலாளரானார்.1990 ஆம் ஆண்டு நிதின் கட்கரி, மகாராஷ்டிரத்தில் நாக்பூர் பகுதி பட்டாதி தொகுதியிஸ் போட்டியிட்டு சட்ட மேலவை உறுப்பினரானார். பின்னர் 1996 இல் மீண்டும் எம்.எல்.சி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1995 ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தில் தேசிய ஜனநாயக முன்னணி அரசு ஏற்பட்டபோது பொதுப் பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலத்தில்தான் மகாராஷ்டிரத்தில் பல்வேறு சாலை கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மும்பையில் 55 மேம்பாலங்கள், மும்பை-புனே விரைவுச்சாலை அவரது ஆட்சியில் அவரது மேற்பார்வையில் அமைக்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய அவரை “பாலங்கள் கட்டுவதில் நாயகர்” என்றே அழைத்தனர்.

இந்தியாவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் தனியார்-அரசு கூட்டுமுயற்சி என்னும் கொள்கையை கொண்டுவந்து செயல்படுத்தியவர் நிதின் கட்கரிதான். இந்த முறைதான் இன்றளவும் இந்தியாவில் பல இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாலை மேம்பாட்டில் இவருக்கு இருக்கும் அசாத்திய திறமையை அறிந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜபேயி, இவர் தலைமையில்தான் தங்க நாற்கரச் சாலை திட்டத்தை செயல்படுத்தினார்.

2009ஆம் ஆண்டு, தனது 52 வயதிலேயே பா.ஜ.க.வின் தேசிய தலைவர் பொறுப்பை ஏற்றார். நாடு முழுவதும் பயணித்து அப்போது ஆட்சியிலிருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தவறுகளையும், ஊழல்களையும் மக்களிடம் எடுத்துச் சென்றார். 2014 மக்களவைத் தேர்தலில் கட்கரி, நாக்பூர் மக்களவைத் தொகுதியில் 2.85லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவருக்கு பிரதமர் மோடி ஆட்சியில் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையிலான முதல் பா.ஜ.க. ஆட்சியிலேயே அவர் சிறப்பாக செயல்பட்டார். ஒருநாளைக்கு 12 கி.மீ. தொலைவு சாலை அமைப்பது என்று இருந்ததை 30 கி.மீ. என்ற இலக்குக்கு கொண்டு சென்றார். சாகர்மாலா துறைமுக வளர்ச்சித் திட்டம் அவரது மேற்பார்வையில்தான் செயல்படுத்தப்பட்டது.

தமது செயல்திறமையால் அனைவரையும் கவர்ந்த அரசியல்வாதியான நிதின் கட்கரி 2019 ஆம் ஆண்டிலும் நாக்பூர் தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் அதே சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. புதிய மோட்டார் போக்குவரத்து சட்டத்தையும் அவர் துணிச்சலுடன் கொண்டுவந்தார்.

பா.ஜ.க.வுக்குள் உள்கட்சிப் பூசல் நிலவும் போதெல்லாம், அந்த சிக்கலுக்கு தீர்வுகாண்பதில் கெட்டிக்காரர் நிதின்கட்கரி. மொத்தத்தில் திறமையும் கண்டிப்பும் நிறைந்த அரசியல்தலைவர் என்று அவரைக் கூறினால் அது மிகையாகாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com