

2025 நவம்பரில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 201 தொகுதிகளில் வரலாறு காணாத வெற்றி பெற்று , ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்த கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் பதவி ஏற்றார்.
பீகார் அரசியலில் திடீர் திருப்பமாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரு தினங்களுக்கு முன்பு ராஜ்யசபா உறுப்பினராக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். மாநில முதல்வர் ஒருவர், அந்த பதவியை விட்டு ராஜ்யசபா உறுப்பினர் ஆவது இந்திய அரசியலில் பெரிய விவாதத்தை கிளப்பியிருந்தது.
இன்று தனது அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, அதை கலைத்த நிதீஷ் குமார் தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். பீகாரின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌத்ரி அல்லது நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவருகின்றன.
இந்நிலையில், நிதிஷ்குமார் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கவர்னர் சையத் அட் ஹஸ்னைனிடம் வழங்கினார். கடந்த 2020ம் ஆண்டு முதல் பீஹார் முதல்வராக இருந்த நிதிஷ்குமார், இனிமேல் தேசிய அரசியலில் ஈடுபட உள்ளார்.