ஆர்பிஐ ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை..!

ஆளுநர் சக்தி காந்ததாஸ்
ஆளுநர் சக்தி காந்ததாஸ்

இந்திய ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தை செவ்வாய்க்கிழமை துவங்கி இன்று கூட்டத்தின் முடிவுகளை வெளியிட உள்ளது. இந்த கூட்டத்திலும் ஆர்பிஐ தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 6.5 சதவீதமாக அறிவித்துள்ளார் ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ். ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லாத காரணத்தால் இந்திய வங்கிகளின் கடனுக்கான வட்டி விகிதம் உயராது. இதனால் EMI தொகையில் ஏதும் மாற்றம் இருக்காது.

சமீபத்தில் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் ஆர்பிஐ முடிவுகளில் எதேனும் தாக்கம் இருக்கலாம் என சந்தேகம் இருந்தது. ஆனால் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை எவ்விதமான மாற்றமும் இல்லை என தெரிகிறது .

இந்திய வங்கி அமைப்பில் தற்போது பணபுழக்கம் உபரியாக உள்ளது, 2000 ரூபாய் நோட்டுகளின் டெபாசிட் மூலம் இது கூடுதலாக அதிகரித்துள்ளது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே மாதம் முதல் சுமார் 250 அடிப்படை புள்ளிகளை ரெப்போ விகிதத்தில் உயர்த்தி இருந்தது. ஆர்பிஐ ஏப்ரல் மாத கூட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கியின் முடிவுகளுக்கு ஏற்ப ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்பிஐ எவ்விதமான மாற்றமும் செய்யாமல் ரெப்போ விகிதம் 6.50% ஆக தொடரும் என அறிவித்தது. ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்ய வேண்டாம் என MPC குழுவில் 6ல் 5 பேர் வாக்களித்துள்ளனர். சந்தை கணிப்புகள் படியே ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஊரக பகுதியில் டிமாண்ட் அதிகரித்து ஊரக வளர்ச்சி பாதையில் உள்ளது என்றும் தெரிவித்தார். 2024 ஆம் நிதியாண்டில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் அதிகமாக தான் இருக்கும் என்றும் 2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ். இதை தொடர்ந்து பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் பணிகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com