சஞ்சய் மிஸ்ராவுக்கு இனி பதவி நீட்டிப்பு இல்லை - மத்திய அரசு தகவல்!

சஞ்சய் மிஸ்ராவுக்கு இனி பதவி நீட்டிப்பு இல்லை - மத்திய அரசு தகவல்!

Published on

அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவுக்கு இனி பதவி நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகும் மூன்று முறை அவருக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட நபருக்கு இதுபோல் தொடர்ந்து பதவி நீட்டிப்பு வழங்குவது அமைப்பின் செயல்பாட்டை பாதிக்கும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. பதவி உயர்வின் மூலம் நிரப்பக் கூடிய பதவி இல்லை என்பதால், பதவி நீட்டிப்பு யாருடைய வாய்ப்பையும் பறிப்பதாகக் கருத முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது, ஒரு குறிப்பிட்ட நபரின் பதவிக் காலத்தை மீண்டும் மீண்டும் நீட்டிப்பதன் காரணம் என்ன? அந்த ஒரு நபரால் மட்டுமே அந்த பதவிக்குரிய கடமையை செய்ய முடியுமா? வேறு யாராலும் செய்ய முடியாதா? அவர் ஓய்வு பெற்ற பிறகு அந்த பதவியின் நிலை என்னாகும்? என அடுக்கடுக்காக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, "அமலாக்கத் துறை இயக்குநராக இருக்கும் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. அதன் பிறகு அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட மாட்டாது" என மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் மனுதார்ர்கள் சார்பில் மூத்த வழ்க்குரைஞர் கோபால் நாராயணன் ஆஜரானார். இது போன்று ஒருவருக்கு தொடர்ந்து பணி நீட்டிப்பு வழங்குவது அந்த அமைப்பின் நேர்மையான செயல்பாட்டை பாதிக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, சஞ்சய் மிஸ்ரா வரும் நவம்பர் மாத்த்துக்கு பின் பதவியில் நீட்டிக்கமாட்டார். நிதிச் செயல்பாடுகள் தொடர்பான பணிக்குழு மதிப்பீட்டின் அடிப்படையிலேயே அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு கோவிட் தொற்று காலமாக இருந்ததால் அப்போது மறு ஆய்வு ஏதும் செய்ய முடியவில்லை. யாரும் தவிர்க்க முடியாதவர்கள் அல்ல, ஒரு குறிப்பிட்ட நபர் இல்லாததால் எந்த அமைப்பும் செயலிழந்து போய்விடாது. ஆனாலும் கடந்த மூன்று வருடங்களாக செயல்பட்டு வரும் சஞ்சய் மிஸ்ரா வித்தியாசமான ஒருவர்தான் என்று குறிப்பிட்டார்.

logo
Kalki Online
kalkionline.com