அடடா.. ரயிலில் இவர்களுக்கு இனி கட்டண சலுகை கிடையாதாம்!

அடடா.. ரயிலில் இவர்களுக்கு இனி கட்டண சலுகை கிடையாதாம்!
Published on

ரயிலில் பயணம் செய்ய மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை கிடையாது என மத்திய  ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ரயில் கட்டணத்தில் எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாமல் இருந்த நிலையில், நேற்று நாடாளுமன்ற மக்களவையில் சுயேச்சை உறுப்பினர் நவ்நீத் இதுபற்றி கேள்வி எழுப்பினார். மீண்டும் எப்போது ரயிலில் கட்டண சலுகை வழங்கப்படும் என கேள்வி எழுப்பினார்,

அதற்கு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததாவது: பயணிகள் சேவைக்காக ரயில்வே ரூ 59 ஆயிரம் கோடி மானியம் வழங்கியுள்ளது. இந்த தொகையானது சில மாநிலங்களின் வருடாந்திர பட்ஜெட் தொகையை விட பெரியது.

ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க ஆண்டுகளுக்கு ரூ 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. தற்போது ரயில்வேயின் நிலைமையை ஒவ்வொருவருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டில் 41 பெரிய ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணி நடந்து வருகின்றது. ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் சலுகை அளிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை.

 -இவ்வாறு அவர் தெரிவித்தார். ரயில்களில் மூத்த குடிமக்கள் பயணம் செய்ய கட்டணத் தொகையில் 50% வரை சலுகை அளிக்கப்பட்டு வந்ததும், கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்த சலுகை நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com