டெல்லியில் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்றால் விதிக்கப்படும் அபராதத்தை நீக்கியதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
-இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்ததாவது:
நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முக கவசம் அணிவது கட்டயமாக்கப் பட்டது. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொது இடங்களில் முககவசம் அணியாமல் சென்றால் 500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்றால் விதிக்கப்படும் அபராதத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-இவ்வாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.