மக்களே உஷார்..! விஜய் வாகனத்திற்கு பின்னால் சாகசம் செய்தவருக்கு ரூ.3000 அபராதம்..!

vijay
vijay
Updated on

சென்னையில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை வாகனத்திற்கு பின்னால் சாகசம் செய்தபடி இருசக்கர வாகனம் ஓட்டியவருக்கு ரூபாய் 3000 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். 

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் மனோஜ் குமார் என்பவர் ஒரு கையை விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் கூட அணியாமல் பயணித்தார். ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டிய நபரை அடையாளம் கண்ட போலீசார், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அவருக்கு போக்குவரத்து போலீசார் 3000 ரூபாய் அபராதம் விதித்தனர். அத்துடன் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த கோட்டூர்புரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு செல்லும்போதெல்லாம் தொண்டர்கள் அவரைப் பின்தொடரக்கூடிய நிலையில் தற்போது ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com