இந்து மதம் என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் கூறிய கருத்தில் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை என்று தெரிவித்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் கமலஹாசன் கூறியதாவது;
சோழ சாம்ராஜ்யத்தில் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற தனியான பெயர் இருக்கவில்லை. அக்காலகட்டத்தில் சைவம், வைணவம், சமணம் ஆகிய மதங்கள்தான் இருந்தன.
இந்து மதம் என்பது நம் நாட்டை அடிமைப் படுத்த வந்த வெள்ளைக்காரன் வைத்த பெயர். ‘பொன்னியின் செல்வன்’ படத்தை பார்த்த பின்புதான் தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கி விட்டதாக ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது.
-இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.