இனி கேரளா அல்ல, கேரளம் – பெயர் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றம்!

Kerala CM
Kerala CM
Published on

கேரளா மாநிலத்தின் பெயரை கேரளம் என்று பெயர் மாற்றும் தீர்மானம் அந்த மாநிலத்தின் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மலையாளத்தை மொழியாக கொண்ட கேரளா 1956ம் ஆண்டு மொழிவாரியாக தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. மலையாளத்தில் இந்த மாநிலத்திற்கு கேரளம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் ஆங்கிலத்தில் கேரளா என்றுதான் அழைக்கப்படுகிறது.

அதேபோல அரசியலமைப்பின் முதல் அட்டவணையிலும் கேரளா என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதனை 'கேரளம்' என்று மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக அம்மாநில மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆகையால், இந்திய மக்களும் கேரளா என்று அழைத்து வந்தனர்.

இதனையடுத்து கடந்த ஆண்டு இது தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் அம்மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன்படி ஆங்கிலம், மலையாளம் என எந்த மொழியிலுமே கேரளாவை கேரளம் என்றுதான் அழைக்க வேண்டும் என்ற தீர்மானம் ஆகும். இதற்கான மாற்றத்தையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேரள சட்டப் பேரவையில், நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் பினராயி விஜயன் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இந்த தீர்மானம் அங்கு பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட்டதையடுத்து மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்தில் சில குறைகள் இருப்பதாக சொல்லி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து கடந்த ஆண்டு முதல்வர் விஜயன் பேசியதாவது, "மலையாளத்தில் எங்களது மாநிலத்தின் பெயர் கேரளம். கடந்த 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் நாள் மொழிவாரியாக கேரளம் பிரிக்கப்பட்டது. இதே நாளில்தான் நாங்கள் 'கேரளப்பிறவி' தினத்தை கொண்டாடுகிறோம். மலையாளம் பேசும் மக்களுக்கு 'கேரளம்' தேவை.

இதையும் படியுங்கள்:
உலகப்போரினால் தடைப்பட்ட படிப்பை இப்போது முடித்துக்காட்டிய மூதாட்டி!
Kerala CM

சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே எங்களின் தாய்மொழி வலுவாக இருந்தது. ஆனால், அரசியலமைப்பின் முதல் அட்டவணை மாநிலத்தின் பெயரை, 'கேரளா' என குறிப்பிடுகிறது. எனவே அரசியலமைப்பின் 3வது பிரிவின் கீழ் இந்த பெயரை 'கேரளம்' என திருத்தம் செய்ய அவசர நடவடிக்கை தேவை." என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது குறித்து பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com