இனி ஸ்னாக்ஸ், டிரிங்க்ஸ், செல்ட்சர் வார்ட்டர் கிடையாது....கூகுள் அதிரடி!

இனி ஸ்னாக்ஸ், டிரிங்க்ஸ், செல்ட்சர் வார்ட்டர் கிடையாது....கூகுள் அதிரடி!

கூகுள் பல ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தும் நிர்ணயிக்க பட்ட செலவின குறைப்பு இலக்கை அடையவில்லை என்பது தான் உண்மை. இந்த நிலையில் அடுத்த சுற்று பணி நீக்கம் அறிவிப்பது குறித்து திட்டமிட்டு வருகிறது . கூகுள் இதற்கு முன்பு செலவுகளை குறைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

தற்போது புதிய அறிவிப்பாக கூகுள் நிறுவனத்தில் வியப்பாக பார்க்கப்படும் இலவச ஸ்னாக்ஸ், உணவு, காஃபி, குளிர்பானங்கள் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செலவுகளை குறைக்க கூகுள் தனது கிளவுட் சேவை பிரிவு ஊழியர்களை Rotation முறையில் அலுவலகத்திற்கு வர உத்தரவிட்டு உள்ளது, இதோடு ஒரு அலுவலகத்தை மொத்தமாக மூடியுள்ளது. இதுவே ஊழியர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்து வந்தது .

இது மட்டும் அல்லாமல் இதற்காக கூகுள் சொல்லும் காரணம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. கூகுள் நிறுவன அலுவலகத்திற்கு வருவோர் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது மட்டும் அல்லாமல் தினமும் வருகை எண்ணிக்கையில் பெரிய தடுமாற்றம் உள்ளது.

கடந்த வாரமே கூகுள் தலைமை நிதியியல் அதிகாரி ரூத் போராட் அதிகப்படியான செலவின குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்தார், இப்புதிய அறிவிப்பு மூலம் கூகுள் நிறுவனத்தில் பல ஊழியர்கள் அலுவலகம் செல்வதையே விரும்புவது இல்லை

இந்த நிலையில் உணவு செலவினை குறைக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க அலுவலகம் உட்பட உலகம் முழுவதும் இருக்கும் கூகுள் அலுவலகத்தில் இலவசமாக கொடுக்கப்படும் ஸ்னாக்ஸ், டிரிங்க்ஸ், செல்ட்சர் வார்ட்டர் ஆகியவற்றை நிறுத்த உள்ளதாக ரூத் போராட் தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே கூகுள் நிறுவனம் ஊழியர்கள் நலன் மற்றும் ஊழியர்களுக்கான சேவைகளை அளிப்பதில் அதிகப்படியான கவனத்தையும் முதலீட்டையும் செய்யும் நிறுவனம். உதாரணமாக அமெரிக்காவின் கூகுள் தலைமை அலுவலகத்தில் 6க்கும் அதிகமான cuisine-ல் உணவுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் 24 மணிநேரமும் இலவசமாக ஸ்னாக்ஸ், ஜிம், கேப் வசதி, யோகா, மசாஜ் சென்டர் என பல விஷயங்கள் உள்ளது. இனி இந்த வசதிகள் யாவும் குறிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com