கழிப்பறைகளுக்கு இனி தண்ணீர் வேண்டாம்! பட்டனைத் தட்டினால் கழிவுகள் சாம்பல்!

கழிப்பறைகளுக்கு இனி தண்ணீர் வேண்டாம்! பட்டனைத் தட்டினால் கழிவுகள் சாம்பல்!

டாய்லெட்டுக்கு மலம் கழிக்கச் சென்றால் இனி தண்ணீர் ஊற்ற வேண்டாம். சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான டாய்லெட் வந்துவிட்டது. பட்டனை தட்டினால் சில விநாடிகளில் அவை சாம்பலாகிவிடும். துர்நாற்றமும் வீசாது.

முற்றிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பான டாய்லெட் செட் தொடர்பான விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக வெளிவந்துள்ளது.

@vanwives என்னும் இன்ஸ்டாகிராம் பக்கம் தனித்துவமான தண்ணீர் ஊற்ற தேவையில்லாத சுற்றுச்சூழல் பாதுகாப்பான டாய்லெட்டை பகிர்ந்து கொண்டுள்ளது. ஒரு சிறிய பட்டனை அழுத்துவதன் மூலம் நாம் கழிக்கும் மலம் எப்படி சாம்பலாகிறது என்று காட்டுகிறது அந்த விடியோ.

ஒருநாள் நீங்கள் கழிக்கும் மலம் சாம்பலாகிவிடும் என்று யாராவது கற்பனை செய்து பார்த்திருப்பார்களா? ஆனால், எதிர்காலத்தில் அதுதான் நடக்கப்போகிறது. நீங்கள் மலம் கழித்துவிட்டு, ஒரு பட்டனை தட்டிவிட்டால் போதும் அவை சாம்பலாகிவிடும். துர்நாற்றமும் வீசாது என்று அந்த விடியோவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடியோவில் இந்த புதிய வகை எரியூட்டியுடன் கூடிய டாய்லெட்டு பற்றி ஒரு பெண் விளக்குகிறார். கழிவுகள் எப்படி சாம்பலாகிறது என்றும் காட்டுகிறார். டாய்லெட்டை திறந்தபிறகு ஒரு டிஷ்யூ பேப்பரை போட வேண்டும். அதன் மீது மலம் கழிக்க வேண்டும். அதன் பிறகு மூடிவிட்டு ஒரு பட்டனை அழுத்தினால் சில விநாடிகளில் அவை சாம்பலாகிவிடும் என்கிறார் அந்த பெண்.

இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த விடியோவை 9 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். சுமார் 2,67,000 பேர் லைக்ஸ் போட்டுள்ளனர்.

இந்த விடியோ பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சிலர் வேண்டுமென்றே சிறுநீர் கழித்தால் என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

டாய்லெட்டில் மலம் கழித்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் எரித்தால் சாம்பலாகிவிடும் என்பது உண்மைதான். ஆனால், அந்த சாம்பலுக்கு ஒரு வாசனை உண்டு. உங்கள் வீட்டுக்கு வருபவர்களிடம் இதுபற்றி விளக்கியாக வேண்டும் என்கிறார் இதை பார்த்த ஒருவர்.

டாய்லெட் போய்விட்டு தண்ணீர் ஊற்றி அதை மக்கச் செய்வது இயற்கையான வழி. ஆனால், அதை சாம்பலாக்கும் முறை அதிக செலவு பிடிக்கும் விஷயம் என்கிறார் மற்றொருவர்.

இதற்கு செலவாகும் எரிவாயுக்கு எங்கே செல்வீர்கள் என்று ஒருவரும், இனி எதிர்காலத்தில் எல்லா டாய்லெட்டும் இப்படித்தான் இருக்கும் என்று மற்றொருவரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

இந்த புதியவகை சின்ட்ரெல்லா இன்சினரேட்டர் டாய்லெட் எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டு முறைகளிலும் செயல்படும். வெப்பத்தினால் ஏற்படும் அழுத்தத்தில் கழிவுகள் சாம்பலாகிவிடும். சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது என்கிறது வலைதளத் தகவல்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com