மேற்கு வங்கம் வேண்டாம், “வங்காளம்” என்ற பெயரே போதும்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்கம் வேண்டாம், “வங்காளம்” என்ற பெயரே போதும்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை “வங்காளம்” அல்லது “வங்கம்” என்று அழைத்தாலே போதுமானது. மேற்கு என்ற பெயரை சேர்க்க வேண்டாம் என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பம்பாய், “மும்பை” என மாற்றப்பட்டது. ஒரிஸ்ஸாவின் ஒடிஸா என மாறியது. அப்படியிருக்கையில் மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை “வங்காளம்” என மாற்றினால் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் பெயரை “வங்காளம்” என மாற்றக் கோரி ஏற்கெனவே மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து விளக்கமும் கொடுக்கப்பட்டது. ஆனாலும் மத்திய அரசு மாநிலத்தின் பெயரை “வங்காளம்” என மாற்ற முன்வரவில்லை என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் மம்தா கூறினார்.

பம்பாய் மும்பையானது, ஒரிஸ்ஸா ஒடிஸாவானது. அப்படியிருக்கும்போது மேற்கு வங்கத்தின் பெயரை “வங்காளம்” என மாற்றுவதில் என்ன சிக்கல் என்று அவர் கேட்டார்.

வங்கம் என்ற பெயருக்கு முன்னாள் மேற்கு என்று இருக்கத்தேவையில்லை. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் உள்ளது. அதேபோல இந்தியாவிலும் பஞ்சாப் மாநிலம் உள்ளது. வங்கதேசத்தின் பெயர் வங்கதேசம் என்றே சர்வதேச அளவில் அறியப்படுகிறது. அப்படியிருக்கும்போது எதற்கு மேற்கு வங்கம் என்று சொல்ல வேண்டும். வங்காளம் என்று சொன்னால் போதாதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஏற்கெனவே மேற்கு வங்கத்தை போங்கோ அல்லது வங்காளம் என பெயர் மாற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கங்கா சாகர் மேளாவை தேசிய விழாவாக அறிவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளோம். இப்போது மீண்டும் கடிதம் எழுத இருக்கிறோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இந்த திருவிழாவுக்காக நாங்கள் ரூ.250 கோடி செலவிட்டுள்ளோம்.

கும்பமேளாவை தேசிய திருவிழாவாக அறிவித்ததற்கு நன்றி. கும்பமேளா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவதில்லை. ஆனால், கங்கா சாகர் விழா, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

கங்கா சாகர் சுந்தர்பானில் ஒரு தீவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தியின் போது கொண்டாடப்படும் இந்த விழாவில் 1 கோடி பேர் இதில் பங்கேற்கின்றனர். எனவே கங்கா சாகர் திருவிழாவையும் தேசிய விழாவாக அறிவித்து நிதியுதவி அளிக்க வேண்டும் என்றார் மம்தா பானர்ஜி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com