இனி சவுதியை சுத்தி பார்க்க விசா எடுக்க வேணாமா? சவுதி அரசு புதிய அறிவிப்பு!

இனி சவுதியை சுத்தி பார்க்க விசா எடுக்க வேணாமா? சவுதி அரசு புதிய அறிவிப்பு!

சவூதி அரேபிய நாட்டின் விமான நிறுவனங்களான சவுதி ஏர்லைன்ஸ் அல்லது ஃப்ளைனாஸ் (Flynas) விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு, சவுதி நாட்டில் நிறுத்தத்துடன் கூடிய புதிய டிரான்சிட் விசாவை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சவுதியா ஏர்லைன்ஸ் அல்லது Flynas விமானத்தில் டிக்கெட் புக் செய்த பயணிகளுக்கு, சவுதி அரேபிய நாட்டில் ஸ்டாப் ஓவர் வசதி உடன் கூடிய புதிய டிரான்சிட் விசாவை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

இப்புதிய டிரான்சிட் விசா மூன்று மாதங்கள் செல்லுபடியாகும், இதைச் சவுதி அரேபிய அரசு இலவசமாகவே வழங்குகிறது. இதன் மூலம் இந்தச் சலுகையைப் பெற பயணம் செய்வதற்கு 90 நாட்களுக்கு முன்பே ஓருவர் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.

இப்புதிய டிரான்சிட் விசா மூலம் சவூதி அரேபியாவில் சுமார் 96 மணி நேரம் அதாவது நான்கு நாட்கள் தங்கி சுற்றுலா தளங்களுக்குச் செல்ல இந்த விசா அனுமதிக்கிறது. வெளியுறவு அமைச்சகம் இந்தச் சேவை இப்போது நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், சவுதியா ஏர்லைன்ஸ் அல்லது ஃப்ளைனாஸின் இணையதளங்கள் மூலம் பயணிகள் போக்குவரத்து விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் உறுதிப்படுத்தியது.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் MOFA தளத்தில் உள்ள ஒருங்கிணைந்த தேசிய விசா தளத்திற்குத் தானாகவே அனுப்பப்படும், இதைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்க்கு டிஜிட்டல் விசா உடனடியாக ஒப்புதல் அளித்து வழங்கப்படும். ஒப்புதல் பெற்ற உடன் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்க்கு அனுப்பப்படும்.

வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் இதே வேளையில் அந்நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை, சுற்றுலா துறை, ரீடைல் வர்த்த்கம், வேலைவாய்ப்பு சந்தை என அனைத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற முடிவில் இந்தப் புதிய டிரான்சிட் விசா அளிக்கப்பட்டு உள்ளது. இந்தப் புதிய திட்டம் சவுதி அரேபியாவின் விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாகச் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக வெளியாகியுள்ளது. இதேபோல் அந்நாட்டின் பொருளாதாரத்திற்குச் சுற்றுலா துறை முக்கியப் பங்கு விகிக்கும் காரணத்தால் உலகளவில் சுற்றுலா பணிகளை ஈர்க்க இந்த 4 நாள் இலவச விசா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

சமீபத்தில் ரஷ்யா வெளிநாட்டினரையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் ஈர்க்க பல தளர்வுகள் உடன் புதிய கோல்டன் விசா அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த விசா குறிப்பாக இந்தியர்களையும், இந்திய முதலீட்டாளர்களையும் ஈர்க்க அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com