மக்களே உஷார்..! இனி டோல் கட்டண நிலுவை இருந்தால்.. இன்சூரன்ஸ், ஆர்சி ரினீவல் பண்ண முடியாது..!

Toll gate fastag
Toll Gate
Published on

முக்கிய அம்சங்கள்

  • புதிய விதி: சுங்கச் சாவடி கட்டணம் செலுத்தாத வாகன உரிமையாளர்களுக்கு பதிவு புதுப்பிப்பு (RC), காப்பீடு, உரிமம் மாற்றம், உடல் தகுதி சான்றிதழ் பெற முடியாது.

  • NOC தடை: சுங்கச் சாவடி கட்டண பாக்கி உள்ளவர்களுக்கு No Objection Certificate (NOC) வழங்கப்படாது.

  • MLFF அமைப்பு: Multi-Lane Free Flow (MLFF) முறையில் சுங்கச் சாவடி கட்டணம் தானியங்கி சேகரிப்பு ஆகும் 

  • FASTag தேவை: செல்லுபடியாகும் FASTag இல்லாவிட்டால் அல்லது கோளாறு இருந்தால் சுங்கச் சாவடி கட்டண பாக்கி பதிவாகும்.

  • Vahan இணைப்பு: சுங்கச் சாவடி தரவுகளை Vahan போர்ட்டலுடன் இணைத்து பாக்கியை வசூலிக்கும் திட்டம்.

  • நடவடிக்கை: பாக்கி தீர்க்கப்படும் வரை வாகன சேவைகள் முடக்கம்.

  • நோக்கம்: தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடி தவிர்ப்பைத் தடுத்தல்.

  • தண்டனை: பாக்கி உள்ள வாகனங்களுக்கு வரி, பதிவு, உரிமம் மாற்றம் மறுக்கப்படும்

இந்திய அரசு வாகன உரிமையாளர்களுக்கு புதிய ஒரு மாற்றத்தை அறிமுகப்படுத்தவுள்ளது, இது சுங்கச் சாவடியில் கட்டணம்  செலுத்தாதவர்களை பெரிதும் பாதிக்கும். புதிய மோட்டார் வாகன விதி அமலுக்கு வந்தால், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடி கட்டண பாக்கி உள்ள வாகன உரிமையாளர்கள் பதிவு புதுப்பிப்பு (RC), காப்பீடு புதுப்பிப்பு, உரிமம் மாற்றம் மற்றும் உடல் தகுதி சான்றிதழ் (Fitness Certificate) போன்ற முக்கிய சேவைகளை பெற முடியாது. இந்த மாற்றத்திற்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த விதி மாற்றம், தேசிய நெடுஞ்சாலைகளில் (NHs) சுங்கச் சாவடிசேகரிப்பை மேம்படுத்தவும், சுங்கச் சாவடி தவிர்ப்பை தடுக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) Multi-Lane Free Flow (MLFF) முறையை அறிமுகப்படுத்தி வருகிறது, இதனால் சுங்கச் சாவடிகள் முழுவதும் டிஜிட்டல் கண்காணிப்பு முறையில் பணம் வசூலிக்கப்படும். இதன் காரணமாக, செல்லுபடியாகாத FASTag அல்லது பாக்கி உள்ள வாகனங்கள் முறையாகப்  பதிவு செய்யப்படும்.

வரைவு அறிவிப்பின்படி, பாக்கி உள்ள வாகனங்களுக்கு பதிவு அதிகாரிகள் வரி செலுத்துதல் அல்லது உரிமம் மாற்றத்தை அங்கீகரிக்க மாட்டார்கள். FASTag இல்லாத அல்லது FASTag கோளாறுள்ள(செல்லுபடியாகாத) வாகனங்கள் டோல் புள்ளிகளை கடக்கும் போது, அது முறையாகப் பதிவாகி பாக்கியாக கருதப்படும். NHAI முன்பே Vahan போர்ட்டலுடன் டோல் பணத்தை இணைக்குமாறு அமைச்சகத்தை கோரியிருந்தது, இதனால் கோளாறு அல்லது செயல்படாத (செல்லுபடியாகாத) FASTag கொண்ட வாகனங்களின் பாக்கிகளை வசூலிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
கார் பிரியர்களுக்கு ஒரு அற்புத செய்தி: இனி ஜப்பானிய எஸ்யூவியும் உங்க பட்ஜெட்டில்!
Toll gate fastag

வாகன உரிமையாளர்கள் தங்கள் டோல் பாக்கிகளை தீர்க்கும் வரை எந்தவொரு வாகன சேவையையும் பெற முடியாது. எனவே, உங்கள் FASTag செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்து, சுங்கச் சாவடிக் கட்டணத்தைச் சரியாக செலுத்துவது அவசியம். இல்லையெனில், உங்கள் வாகனத்தின் எதிர்கால சேவைகள் பாதிக்கப்படலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com