சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு தமிழக அரசிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை!

அன்புமணி ராமதாஸ் கேள்விக்கு நிதின் கட்காரி விளக்கம்!
Anbumani
Anbumani
Published on

சென்னை-சேலம் 8 வழிச்சாலை தொடர்பான அன்புமணி ராமதாஸ் கேள்விக்கு தமிழக அரசிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் தாக்கலுக்குப் பின் இரண்டாம் கட்ட அமர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.

சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதும், அத்திட்டத்திற்கு மக்களும் அன்றைய எதிர்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. விவசாய நிலங்களை அழித்துவிட்டு எங்களுக்கு சாலை தேவை இல்லை என விவசாயிகள் போராடிய போது, விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட கட்சிகள் நின்றன.

nithin  katkaari
nithin katkaari

இதில், சென்னை-சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார். அதில், சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை மத்திய அரசின் "பாரத்மாலா பிரயோஜனா" திட்டத்தின் கீழ் சென்னை - சேலம் இடையே 277.33 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு ஏதேனும் விண்ணப்பம் கிடைத்துள்ளதா? என்று குறிப்பிட்டு, மேலும் இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசிடம் இருந்து எதிர்ப்பு ஏதேனும் எழுந்தததா? என்றும் அன்புமணி வினவியிருந்தார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்திற்கு மாநிலங்களவையில் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ், கேள்விக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எந்த விண்ணப்பமும் வரவில்லை என்று கூறியுள்ளார். அதே சமயம் இத்திட்டத்திற்கு தமிழக அரசிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், திமுக அரசு எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com