இன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதிக தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
எல்லா வருடங்களை போலவே 10-ம் வகுப்பு முடிவு வெளியான நிலையில் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி!
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வினில் 87.45% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்று திறனாளி மாணவர்கள் 89.77% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்று திறனாளி மாணவர்களில் தேர்வு எழுதிய 10808 மாணவர்களில் 9703 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
100% மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் எண்ணிக்கை:
தமிழ் பாடத்தில் யாருமே 100 க்கு 100 பெறவில்லை .
ஆங்கிலத்தில் 89 பேர் 100 க்கு 100 எடுத்துள்ளனர்.
கணித பாடத்தில் 3649 பேர் 100 க்கு 100 எடுத்துள்ளனர்.
அறிவியல் பாடத்தில் 3584 பேர் 100 க்கு 100 எடுத்துள்ளனர்.
சமுக அறிவியல் பாடத்தில் 320 பேர் 100 க்கு 100 எடுத்துள்ளனர்
10ம் வகுப்பு தேர்ச்சி – டாப் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்:
1) பெரம்பலூர் – 97.67%
2) சிவகங்கை – 97.53%
3) விருதுநகர் – 96.22%
4) கன்னியாகுமரி – 95.99%
5) தூத்துக்குடி – 95.58%
10ம் வகுப்பு முடிவுகளில் பாட வாரியான தேர்ச்சி விகிதம் மற்றும் 100% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
10ம் வகுப்பு தேர்ச்சி – பாட வாரியான தேர்ச்சி விகிதம்:
தமிழ் – 95.55%
ஆங்கிலம் – 98.93%
கணிதம் – 95.54%
அறிவியல் – 95.75%
சமூக அறிவியல் – 95.83%