ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில்ர நான்கு சக்கர வாகன பார்க்கிங் மூடப்படடுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. ஆலந்தூர் மெட்ரோ, கத்திப்பாரா ஸ்கொயர் போன்ற பகுதிகளில் சரியான பார்க்கிங் வசதி இல்லாமல் மக்கள் இனி சிரமப்பட நேரிடும்.
சென்னை பெருநகரத்தின் நுழைவாயிலாக கத்திப்பாரா மேம்பாலம் இருக்கிறது. மேம்பாலம் வருவதற்கு முன்னர் கத்திப்பாரா முனை என்றொரு சந்திப்பு இருந்தது. தென் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் கத்திப்பாராவை கடந்துதான் சென்னை மாநகரத்திற்குள் உள்ளே வரமுடியும். இன்றும் கோயம்பேடு நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் கத்திப்பாராவை கடந்துதான் செல்ல வேண்டும்.
தற்போது மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பகுதிகளை சீர்படுத்தி, பூங்காங்கள், நடைபாதைகள், கடைகள் அமைத்து கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் என்றொரு மினி பார்க் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையின் எந்த மூலையிலிருந்தும் பஸ், ரயில் வசதி உண்டு. ஆலந்தூர் மெட்ரோ நிலையத்திற்கு வெகு அருகில் என்பதால் போக்குவரத்து, பார்க்கிங் பிரச்னையில்லை என்கிற நிலை இருந்தது வந்தது.
இந்நிலையில் மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி புதுப்பிக்கப்பட உள்ளதால், சீரமைப்பு பணிகளுக்காக மூடப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
கோயம்பேடு செல்லவும், திருவொற்றியூர் செல்லவும் ஆலந்தூர் மெட்ரோ முக்கியமான சந்திப்பாக இருந்து வருகிறது. ஏற்கனவே ஆலந்தூர் மெட்ரோ, கத்திப்பாரா ஸ்கொயர் போன்ற பகுதிகளில் பார்க்கிங் வசதி யில்லாமல் கார்களை நிறுத்துவது சிரமமமாக உள்ளது. டூவீலர் பார்க்கிங் கூட நிரம்பி வழிகிறது. இனி பார்க்கிங் இல்லாவிட்டால் பயணிகள் நிறைய சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
மூன்று மாதங்களுக்கு பின்னர் பார்க்கிங் பகுதி செயல்பட ஆரம்பித்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக பயணிகள், தங்களது வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ நிலைய வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பரங்கிமலை மெட்ரோவுக்கும் ஆலந்தூர் மெட்ரோவுக்கும் தூரம் அதிகமில்லை. சொந்த வாகனங்களில் வருபவர்கள் பரங்கிமலை மெட்ரோ பகுதியில் பெரிய அளவில் பார்க்கிங் பகுதி உள்ளது. அதை பயன்படுத்துவதன் மூலமாக ஆலந்தூர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியில் குறைக்க முடியும் என்கிறார்கள். வரவேற்க வேண்டியதுதான்.