பொறியியல் படிப்பு: 193 கல்லூரிகளில் நோ அட்மிஷன்; அதிர்ச்சி தகவல்!

பொறியியல் படிப்பு: 193 கல்லூரிகளில் நோ அட்மிஷன்; அதிர்ச்சி தகவல்!

பொறியியல் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 193 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் மட்டுமே அதிக மாணவர்கள் சேருவார்கள். பிறகு அடுத்தடுத்து பல படிப்புகள் வர, பொறியியல் மீது இருந்த நாட்டம் மாணவர்களுக்குக் குறையத் தொடங்கியது.

நீட் போன்ற தேர்வுகள் வந்த பிறகு மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஏற்கெனவே பொறியியல் படித்த பலர் தற்போது வேலையின்றி சிரமப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதனால் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்வதற்கு பலரும் யோசிக்கின்றனர் என்றே சொல்லலாம். அந்த வகையில், இந்த ஆண்டுக்குரிய பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில், 193 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பொறியியல் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்து, தற்போது இரண்டாம்கட்ட கலந்தாய்வு கடந்த புதன்கிழமை தொடங்கியுள்ளது. முதற்கட்ட கலந்தாய்வில் 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற 80 மாணவர்களில் 42 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், AI, data science, ECE போன்ற படிப்புகளில் சேர்ந்திட மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 கல்லூரிகளில் மட்டும் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், 193 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகம், எம்ஐடி வளாகம், ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிகளில் 90 சதவிகிதத்துக்கு அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள 440 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 71 இடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com