கலாச்சாரம், வரலாறு மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் காரணமாக, இந்தியச் சுற்றுலாப் பயணிகள் ஈரானுக்குச் செல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் மற்றும் ஷிராஸ் போன்ற வரலாற்று நகரங்களுக்கும், இந்தியர்களுக்குப் புனித யாத்திரை தலங்களாக விளங்கும் கோம், மஷாத் போன்ற இடங்களுக்கும் அவர்கள் ஆண்டுதோறும் செல்கின்றனர். மேலும், ஈரானின் பரந்து விரிந்த பாலைவன நிலப்பரப்புகளும், பழங்காலச் சாலைகளும் இந்தியப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.
சாதாரண பாஸ்போர்ட்டுகளை வைத்திருக்கும் இந்திய குடிமக்கள் இப்போது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விசா இல்லாமல் ஈரானுக்குள் செல்லும் வசதி நடப்பில் உள்ளது.ஆனால்,இது தவறாக பயன்படுத்தப் பட்டு வருவதாகக் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், நவம்பர் 22ம் தேதி முதல் இந்தியர்கள் முறையான விசா ஒன்று இல்லாமல் ஈரானுக்கு பயணிக்க முடியாது. இதற்கான உத்தரவு ஒன்றை ஈரான் அரசு சமீபத்தில் பிறப்பித்துள்ளது. மேலும், இதன் மூலம் ஈரான் அரசு இந்தியர்களுக்கு இதுவரை அளித்து வந்த இந்த சலுகையில் தற்பொழுது மாற்றைத்தை கொண்டு வந்துள்ளது.இதன் மூலம் முறையான விசா ஒன்று இல்லாமல் இந்திய சுற்றுலாப் பயணிகள் ஈரான் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
முன்பு சாதாரண பாஸ்போர்ட் வைத்திருந்த இந்திய சுற்றுலாப் பயணிகள், குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் விசா இல்லாமல் ஈரானுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் புதிய நடைமுறையின் படி, நுழைவு மற்றும் போக்குவரத்திற்கும் முன்கூட்டியே செல்லுபடியாகும் விசா பெற வேண்டும்.இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடைமுறை அமல்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இனி பயணிகள் ஈரானுக்கு விமானத்தில் விமான நிலையங்களில் பயணிக்கும் போது தங்கள் முறையான விசாவை காட்ட வேண்டும். ஏனெனில் முறையான விசா இல்லாமல் விமானத்தில் ஏறவோ, ஈரானிலிருந்து பயணிப்பதோ தற்போது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.மேலும், ஐரோப்பா அல்லது மத்திய ஆசியா செல்லும் பயணிகளுக்கு ஈரான் ஒரு வசதியான போக்குவரத்து மையமாக உள்ளது. இந்த புதிய விசா விதி ஈரானை தற்காலிக வழியாக பயன்படுத்தி வந்த பயணிகள் பயணத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் அரசு தற்போது கொண்டு வந்துள்ள விசா சலுகை வசதியை தவறாக பயன்படுத்தி, வேலைவாய்ப்பு அல்லது பயணத்திற்கான பொய்யான வாக்குறுதிகளுடன் ஈரானுக்கு நுழைந்த இந்தியர்களின் சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.