பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கிளாடியா கோல்டின்... இவரை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க!

Claudia Goldin
Claudia GoldinEditor 1

பொருளாதாரத்திற்கான நோபல் நினைவுப் பரிசு, ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிளாரா கோல்டின் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை, நோபல் குழுமம், ஸ்டாக்ஹோமில் வெளியிட்டது.

நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொருளாதார பேராசிரியர் டாக்டர் கோல்டின் ‘தொழிலாளர் பங்கேற்பு மற்றும் வருவாயில் பாலின இடைவெளிக்கான காரணங்கள்’ என்ற ஆராய்ச்சியினை மேற்கொண்டதற்காக வழங்கப்பட்டுள்ளது. இவர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

1969ஆம் வருடம் முதன் முதலில் பொருளாதாரத்திற்கான பரிசு வழங்கப்பட்டது. டாக்டர் கோல்டின், இந்தப் பரிசை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாமல், தனித்து கௌரவிக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பு. 77 வயதான டாக்டர் கோல்டின், 1989 ஆம் வருடம், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின், பொருளாதரத் துறையில் பதவி பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமைக்கு உரியவர்.

டாக்டர் கோல்டின் ஆராய்ச்சியின் படி, திருமணமான பெண்கள் வேலைக்குச் செல்வது 1800ம் நூற்றாண்டிலிருந்து குறைய ஆரம்பித்தது என்றும், அந்த காலகட்டத்தில் பொருளாதர வளர்ச்சி, வேளாண்மையிலிருந்து தொழிற்கூடங்களுக்கு மாறத் தொடங்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் 19ம் நூற்றாண்டில் தொழில் வளர்ச்சி சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளுடன் சேவைத் துறையின் வளர்ச்சியினால் பெண்கள் ஆசிரியர், செவிலியர், மருத்துவர் போன்ற துறைகளில் நுழையத் தொடங்கினார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஒரே துறை சார்ந்த வேலைகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பணியாற்றினாலும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் முரண்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. பாலினங்கள் இடையே ஊதிய இடைவெளியை முற்றிலுமாக குறைப்பது நடப்பதில்லை என தன்னுடைய ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ள டாக்டர் கோல்டின், தற்போது அமெரிக்காவில் ஆடவரின் ஒரு டாலர் ஊதியத்திற்கு, அதே வேலையில் இருக்கும் மகளிரின் ஊதியம் 80 சென்ட்கள் மட்டுமே என்கிறார்.

முன்பு பாலின ஊதிய இடைவெளிக்கு காரணமாக படிப்பு, செய்கின்ற வேலையைக் காரணமாகச் சொல்வார்கள். ஆனால் டாக்டர் கோல்டின் ஆராய்ச்சியின் படி ஒரே வேலையைச் செய்யும் ஆணிற்கும், பெண்ணிற்கும் ஊதியத்தில் இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளி பெண் ஒரு குழந்தை பெற்றவுடன் அதிகரிக்கிறது என்கிறது ஆராய்ச்சி. ஒரு ஆணும், பெண்ணும் வளர்ந்த சூழ்நிலை, அவர்கள் வளர்ந்த குடும்ப அமைப்பு, ஆகியவை, அவர்களின் பிற்கால நடத்தை மற்றும் பொருளாதார முடிவுகளுக்கு காரணமாகிறது.

வளர்ச்சிகள் நிறைய இருந்தாலும், வேற்றுமைகள் உள்ளன. இதனால், பெண்கள், ஆண்களைக் காட்டிலும் வீட்டில் அதிக வேலை செய்யும் நிலையில் இருக்கிறார்கள். ‘கணவன், மனைவியிடையே எல்லாம் சமபங்கு என்ற நிலை வரும் வரை, பாலின பாகுபாடு களைய முடியாது’ என்கிறார் டாக்டர் கோல்டின்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com