#BIG NEWS : எரிவாயு தட்டுப்பாடுக்கு வந்தாச்சு ஒர் தீர்வு..! இந்தியாவின் முதல் 'LPG ATM' அறிமுகம்..!

இந்த ஈரான் போரின் மத்தியில் நாடு தழுவிய எல்பிஜி நெருக்கடி உச்சத்தில் இருக்கும் வேலையில் முதல் எல்பிஜி ஏடிஎம் (LPG gas ATM) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
LPG Gas ATM
LPG Gas ATMAI generated
Published on

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இஸ்ரேல் - அமெரிக்கா நாடுகள் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடவடிக்கையை தொடங்கிய நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போர் இன்று முடியும், நாளை முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு முடிவே இல்லாமல் கிட்டத்தட்ட மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து வருவதால் பதற்றம் அதிகரித்து வருகிறது. மேலும் இது உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் நிலையற்ற தன்மையையும், கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் குறித்த கவலைகளையும் தூண்டியுள்ளது.

ஈரான்-அமெரிக்கா இடையேயான இந்த போர், இந்தியாவிற்கு மிகப்பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. ஏனெனில் இந்த போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை ஒரு பேரல் $110-ஐ தாண்டியுள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் கிட்டத்தட்ட பாதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே செல்கிறது.

அதே சமயம், எல்பிஜி மற்றும் எல்என்ஜி சரக்குகளின் பெரும் பங்கும் இதே பாதையில்தான் பயணிக்கிறது. உலகத்தில் அதிகமாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான். கச்சா எண்ணெயில் இருந்து எடுக்கப்படும் பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு 88 சதவீத இறக்குமதியை நம்பியே இந்தியா உள்ளது.

இதையும் படியுங்கள்:
உங்க கேஸ் சிலிண்டர் Expire ஆகிடுச்சா? கண்டுபிடிப்பது எப்படி?
LPG Gas ATM

தற்போது கச்சா எண்ணெய் வரத்து தடையால், இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் பற்றாக்குறை மற்றும் வணிக ரீதியான சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு நிலைமை சீராக இருப்பதாகக் கூறினாலும், நிலப்பரப்பில் பற்றாக்குறை உணரப்படுகிறது. குறிப்பாக வணிக ரீதியிலான (Commercial) சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஈரான் போருக்கு மத்தியில் நாடு தழுவிய எல்பிஜி நெருக்கடி உச்சத்தில் இருக்கும் வேலையில் வட இந்தியாவில் குருகிராம் (Gurugram) நகரத்தில் முதல் எல்பிஜி ஏடிஎம் (LPG gas ATM) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எல்பிஜி ஏடிஎம் மூலம் வெறும் 2 முதல் 3 நிமிடங்களில் மீண்டும் நிரப்பப்பட்ட சிலிண்டர் கிடைக்கும் என்றும் இனிமேல் சமையல் கேஸ் தீரும்போது நாள்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய இயந்திரத்தின் மூலம் 24 மணிநேரமும் சிலிண்டர் பெறமுடியும்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தால் ஒரு முன்னோட்டத் திட்டமாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த புது எல்பிஜிஇயந்திரம் முற்றிலும் தானியங்கி மற்றும் தொடுதலில்லா முறையில் இயங்கக்கூடியது.

இந்த முறையில், வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொண்டு உள்நுழைந்து OTP மூலம் சரிபார்த்து, கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, டிஜிட்டல் முறையில் (யுபிஐ அல்லது கார்டு) பணம் செலுத்தியதும் நிரப்பப்பட்ட சிலிண்டர் (cylinders) இயந்திரத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, காலி சிலிண்டர் உள்ளே வைக்கப்படுகிறது.

ஆனால் இந்த ATM-ல் இருந்து வழங்கப்படும் சிலிண்டர்கள் ஃபைபரால் செய்யப்பட்ட கலப்பு சிலிண்டர்களாகும். தோராயமாக 15 கிலோ எடை மட்டுமே கொண்டுள்ள இந்த புதிய சிலிண்டர்கள் எடை குறைந்தவை, சுகாதாரமானவை மற்றும் துருப்பிடிக்காதது என்று கூறப்படுகிறது. மேலும் இதில் ஒளிபுகும் வடிவமைப்பு இருப்பதால் எரிவாயுவின் அளவைக் காணவும் முடியும். ஆனால் தற்போது நடைமுறையில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் சுமார் 31 கிலோ எடை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் என்னவெனில், இந்த இயந்திரம் ஒரே நேரத்தில் 10 சிலிண்டர்களை வைத்திருக்கக்கூடிய திறன் கொண்டது மற்றும் கையிருப்பு குறைவாக இருக்கும்போது தானாகவே கேஸ் ஏஜென்சிக்கு எச்சரிக்கை செய்யும் வசதியும் இதில் உள்ளது. இந்த முயற்சி எரிவாயு கேஸ் விநியோக அமைப்பை நவீனமயமாக்குவதற்கான ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
முதலில் பெட்ரோல் இப்போ எல்பிஜி, சமையல் எண்ணெய்..?? மக்களை வாட்டி எடுக்கும் ஈரான் போர்..!!
LPG Gas ATM

தற்போது குருகிராமத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய முன்னோடித் திட்டம் வெற்றி பெற்றால் நாட்டின் பிற நகரங்களிலும் விரைவில் எல்பிஜி ஏடிஎம்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com