சிவப்பு லிப்ஸ்டிக் போட்டால் தண்டனை! எந்த நாட்டில் தெரியுமா?

Red Lipstick and President of north korea
Red Lipstick Banned
Published on

சுதந்திரத்தைப் பறிப்பது என்பது ஒருவரின் அதிகாரமாகக் கருதப்படுகிறது. அதுவும் ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தின் சுதந்திரத்தைப் பறிப்பது என்பது சர்வாதிகாரமாகவே கருதப்படும். அப்படியிருக்க, நாட்டு பெண்களின் விருப்பம் மற்றும் உரிமையைப் பறிப்பதை என்னவென்று கூறுவது?

லிப்ஸ்டிக் உருவான காலத்திலிருந்து சிவப்பு நிறம்தான் அதிகம் பயன்படுத்தும் ஒன்றாகவும், விரும்பப்படும் ஒன்றாகவும் இருந்து வருகிறது. உலகின் பல நாடுகளில் விசித்திரமான விதிகள் விதிக்கப்பட்டும், அதனை மக்கள் கடமையென பின்பற்றுவதும் வழக்கம்தான். ஆனால், ஒருநாட்டில் சிவப்பு லிப்ஸ்டிக்கே பயன்படுத்தப்பட கூடாது என்றும், மீறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் கட்டளை இடப்பட்டிருக்கிறது.

பல விசித்திரமான விதிகளை விதிக்கும் நாடுகளில் ஒன்றான வடகொரியா தான் இந்த விதியை நாட்டு மக்களுக்கு விதித்திருக்கிறது. 21ம் நூற்றாண்டில் உலகளவில் மிகவும் அறியப்பட்ட ஒரு அதிபரான கிம் ஜாங்-உன் தான் வடகொரியாவின் அதிபராவார். ஃபேஷன் தொடர்பான பல விதிகளை அந்த நாட்டு மக்களுக்கு விதித்து வருகிறார்.

முன்னதாக வடகொரியாவில், ஸ்கின்னி ஜீன்ஸ் உடுத்தினால், வெளிநாட்டு புத்தகங்கள், படங்கள் பார்த்தால், டி ஷர்ட் பனியனில் வசனங்கள், Slogan உடன் உடுத்தினால், வெஸ்டெர்ன் உடைகள் உடுத்தினால் என அனைத்திற்கும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். இன்னும் ஏராளமான விதிகள் உள்ளன. அவற்றை அந்த மக்கள் நினைவில் வைத்துக் கொள்வதே மிகவும் கடினமான விஷயம். அப்படியிருக்க பின்பற்றுவது எவ்வளவு கடினம்? தவறுதலாக விதியை மீறினால், பாரபட்சம் பார்க்காமல் தண்டனை விதிக்கப்படும்.

அதன்படி அந்நாட்டில் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் பல மேக்கப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டத்துடன் வடகொரியாவில் இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான பெண்களால் மிகவும் விரும்பப்படும் ரெட் கலர் லிப்ஸ்டிக்கை பயன்படுத்த வட கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப்படி இந்த சிவப்பு நிற லிப்ஸ்டிக்கில் என்னதான் உள்ளது? அவர் ஏன் தடை விதித்தார் தெரியுமா?

வடகொரியா அதிபர் சிவப்பு நிறத்தை முதலாளித்துவம் மற்றும் தனித்துவத்துடன் தொடர்புடையதாக கருதுகிறார். சிவப்பு நிறம் தன்னைவிட பெரியவர் இல்லை என்ற உணர்வை குறிப்பதாகவும் நம்புகிறார். இதனால் கிம் ஜாங் உன் தனது நாட்டில் வசிக்கும் எந்த நபரும் ஆட்சியாளரை விட அதாவது தன்னைவிட பெரியவராக இருக்கக் கூடாது என்பதற்காக ரெட் கலர் லிப்ஸ்டிக்கைத் தடை விதித்துள்ளார். 

வட கொரியாவில் உள்ள பெண்கள் லைட் ஷேட் கொண்ட லிப்ஸ்டிக் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதி. சிவப்பு உள்ளிட்ட டார்க் நிறங்களைப் பயன்படுத்தக்கூடாது. தடைவிதிக்கப்பட்ட அழகு பொருட்களை பயன்படுத்தி மக்கள் சென்றால், அவர்களை உடனே கைது செய்ய எப்போதும் போலீஸார்கள் ரோந்து பணிகளில் இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
Bottleguard Facemask: சருமத்தை பொலிவாக்கும் சுரைக்காய் ஃபேஸ் மாஸ்க்!
Red Lipstick and President of north korea

மேலும், முடிக்கு கலரிங் செய்ய கூடாது. செயின்கள், மோதிரங்கள் அணிய கூடாது. இன்னும் சொல்லப் போனால், ஆண்களுக்கு 10 சிகை அலங்காரமும், பெண்களுக்கு 18 சிகை அலங்காரமும்தான் அனுமதி. மீறினால், அவ்வளவுதான்.

அனைவரும் சமம் என்ற கோட்பாடை உடைத்து, தன்னைவிட அனைவரும் கீழ்தான் என்ற கோட்பாட்டின் அடிப்படையில்தான், இந்த கடுமையான விதிகள் விதிக்கப்படுகின்றன. மேலும், இந்த கடுமையான விதிகள், நாட்டின் வளர்ச்சியை தடுப்பதோடு, சர்வாதிகாரத்தின் வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது என்பதே உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com