பெண்களுக்கு மத்தியில் கதறி அழுத வடகொரிய அதிபர். ஏன்? 

Kim Jong Un.
Kim Jong Un.
Published on

சமீபத்தில் வடகொரியாவில் நடந்த மாநாடு ஒன்றில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பெண்களுக்கு மத்தியில் கண்கலங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏன் அப்படி அழுதார்? 

வெளியுலகத்துடன் எவ்விதமான தொடர்புகளும் இல்லாமல் மிகவும் வித்தியாசமாக செயல்படும் நாடு வடகொரியா. இது உலகின் மர்ம தேசம் என அழைக்கப்படுகிறது. இந்நாட்டில் பல்வேறு விதமான கடுமையான சட்ட விதிகள் உள்ளன. அதுவும் இந்த நாட்டை ஆண்டு வரும் அதிபர் ‘கிம் ஜாங் உன்’ சர்வாதிகளை போல நாட்டை ஆட்சி செய்து வருகிறார். அதுமட்டுமின்றி உலகிலேயே சக்தி வாய்ந்த நாடாக இருக்கும் அமெரிக்காவை எதிர்ப்பதிலும் இவர் முன்னோடியாகத் திகழ்கிறார். 

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி பல்வேறு விதமான ஏவுகணை சோதனைகளையும், அணு ஆயுத சோதனைகளையும் அவர் நிகழ்த்தி வருகிறார். பரப்பளவைப் பொருத்தவரை வடகொரியா மிகவும் சிறிய நாடு. இந்த நாட்டில் வெறும் இரண்டரை கோடி மக்கள் மட்டுமே உள்ளனர். எனவே தன் நாட்டில் உள்ள பெண்கள் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறி சமீபத்தில் நடந்த மாநாடு ஒன்றில் பெண்களுக்கு மத்தியில் மேடையிலேயே கண்கலங்கி உள்ளார் கிம் ஜாங் உன். 

பெண்களுக்கு மத்தியில் அவர் பேசும்போது “நமது நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் பெண்களாகிய நீங்கள் அதிகம் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும். அதுதான் நம் நாட்டை பாதுகாக்கும். இதனால் நம் நாட்டு பாரம்பரியம் நன்றாக வளரும். அனைவருக்கும் முறையான கல்வியை வழங்க நான் தயாராக இருக்கிறேன்” என அவர் பேசும்போதே கண்கலங்கி அழுதார். 

வடகொரிய பெண்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்தால் அவர்களுக்கு இலவச உணவு, மருந்து, வீடு, வீட்டுக்கு தேவையான பொருட்கள் அனைத்துமே கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார். சமீபத்திய தரவுகளின் படி வடகொரிய பெண்களின் குழந்தை பிறப்பு விகிதம் சராசரியாக 1.8 என்ற அளவிலேயே உள்ளது. இது அவர்களின் அண்டை நாடுகளை விட அதிகமாக இருந்தாலும் மேலும் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என சிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அவர் அழுது கொண்டே தன் கைக்குட்டையை எடுத்து கண்ணீரை துடைத்த காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com