கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா.

ண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய 'பாலிஸ்டிக்' ஏவுகணை சோதனையை பல நாடுகளின் எதிர்ப்புக்குப் பிறகும் வடகொரியா நடத்தியுள்ளது. இந்த செயல் வடகொரியாவுக்கு எதிராக இருக்கும் தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்கொரியாவும் அமெரிக்காவும் சர்வதேச அளவில் நட்பு நாடாக இருந்து வரும் நிலையில், இவர்களுக்கு எதிராக வடகொரியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக நாட்டோ படையினர் கொரிய தீபகற்பத்திலிருந்து முழுமையாக விரட்டப்பட வேண்டும் என்பதில் வடகொரியா தீவிரம் காட்டுகிறது. ஆனால் இந்த செயலுக்கு தென்கொரியாகவும் அமெரிக்காவும் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இந்நாடுகளுக்கு மத்தியில் பதற்றம் நீடித்து வருகிறது. 

இந்நிலையில்தான் சமீபத்தில் அமெரிக்காவும் தென்கொரியாகவும் ராணுவ பயிற்சியைத் தொடங்கினர். இந்த பயிற்சியை கடந்த 2018 ஆம் ஆண்டு 'சுதந்திரக் கேடயம்' என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி ஆண்டுக்கு 10 நாட்கள் இருநாட்டு ராணுவமும் தங்களின் போர் பயிற்சியை பிற நாட்டு ராணுவத்தினரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். தற்போது நடக்கும் ராணுவப் பயிற்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற மிகப்பெரிய ராணுவப் பயிற்சியாகும். 

மேலும் இதேபோல வேறு ஏதாவது ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு ஆண்டில் பலமுறை அமெரிக்காவும் தென்கொரியாகவும் ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவார்கள். இப்படி அவ்வப்போது இவர்களுக் கிடையே நடக்கும் பயிற்சியால் வடகொரியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றெண்ணி, வழக்கம்போல அவர்கள் நடத்தும் ஏவுகணை பரிசோதனையை தீவிரப்படுத்தினர். அப்படி இந்த முறை அவர்கள் கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 பாலிஸ்டிக் ஏவுகணையை பரிசோதித்துள்ளனர். மேலும் நீர்மூழ்கி கப்பல் வழியாக ஏவுகணையை ஏவுவதையும் வடகொரியா முயற்சித்துள்ளது. இதில் அவர்கள் வெற்றியும் கண்டுவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து பலரது எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா பல ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. தற்போது சோதிக்கப்பட்ட ஏவுகணை சுமார் 1500 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். 1500 கிலோமீட்டர் எனும் பட்சத்தில் அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பானும் இதன் வரம்புக்குள் வருகிறது. அதேபோல அமெரிக்காவின் முக்கியமான ராணுவ தளங்களும் இந்த எல்லைக்குள் வருவதால், அமெரிக்காவும் தென்கொரியாகவும் இந்த ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இவர்களின் இந்த செயல் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் செயல் என குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே வடகொரியா மீது அணு ஆயுதங்களை பயன் படுத்துவதாக பல புகார்கள் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் தாங்கள் செய்வதுதான் சரி என்று, பல பயங்கர ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து செய்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com