வடகிழக்கு பருவமழை அப்டேட்ஸ்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்
Published on

வடகிழக்கு பருவமழையின் தாக்கம் எப்போதும் கடலோர மாவட்டங்களில் தான் அதிகமா இருக்கும். கடந்த ஆண்டு சென்னையில் டிசம்பர் கடைசி வரை மழை பெய்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் அதிகமாக மழை பெய்தது. அது போல் இந்த பருவமழையும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம் வரை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான இடங்களில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மழை
மழை

மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அங்கங்கே மரங்கள் முறிந்து விழுவதை அப்புறப்படுத்தும் பணிகள் மிகவும் துரிதமாக செயல்பட்டுவருகிறது மாநகராட்சி அமைப்புகள்.

வட மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. மயிலாடுதுறையில் பெய்த மழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 2 நாட்களாக பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

 மழை
மழை

இந்த நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, முள்ளக்காடு, ஆத்தூர், திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்துவருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இரு தினங்களாக பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரை அடுத்து வெள்ளத்திற்கு அதிகம் பாதிக்கப்படுவது கடலூர் மாவட்டமாகும்.

கனமழை காரணமாக மயிலாடுதுறை , கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடர் மழைக் காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு மட்டு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com