பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க சார்பில் நோட்டீஸ்!

பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை

தி.மு.க தலைவர்களின் சொத்துப் பட்டியல் வெளியிட்டது தொடர்பாக பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள ரஃபேல் கடிகாரம் குறித்து அரசியல் ரீதியாக சர்ச்சைகள் வெடித்த நிலையில், இந்த கடிகாரத்தை வாங்கியதற்கான ரசீதை சித்திரை மாதம் ஒன்றாம் தேதி வெளியிடுவதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ரஃபேல் கடிகாரம் வாங்கியதற்கான ரசீதை வெளியிட்டார். மேலும், தனது வங்கி கணக்கு, சம்பள விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து ஏற்கனவே அறிவித்ததைப் போன்று திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். அப்போது பேசியவர், வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல்களும் வெளியிடப்படும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

உங்கள் ரஃபேல் கைக் கடிகாரம் பா.ஜ.கவின் சொத்தாக மாறுமா? 2 நாட்களில் மன்னிப்பு கேட்டு, வீடியோவை நீக்காவிட்டால் வழக்குத் தொடரப்படும். சமூக ஊடகங்கள் இணையதளங்களில் உள்ள வீடியோவை நீக்க வேண்டும்’ என்று தி.மு.க சார்பில் பேசி வருகிறார்கள்.

கடந்த மாதம் நடைபெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் 27 பேரின் சொத்து பட்டியல், தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.

அதன்படி, ஏப்ரல் 14-ம் தேதி காலை 10.15 மணியளவில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்து பட்டியல் என்ற பெயரில் ஆவணங்களை அண்ணாமலை வெளியிட்டார். அப்போது, பிஜேபி மாநில தலைவர்

அண்ணாமலை அவர் கட்டியிருக்கும் ரஃபேல் கைக் கடிகாரத்தின் பில்லையும் வெளியிட்டார். தொடர்ந்து, அ.தி.மு.க தலைவர்களின் சொத்துப் பட்டியலும் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியல் குறித்த அறிவிப்பை தி.மு.க தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில், அண்ணாமலைக்கு எதிராக தி.மு.க சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘தி.மு.க நிர்வாகிக்கு சொந்தமான சொத்துகள் மற்றும் நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது. முதலமைச்சர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், நிர்வாகிகளின் நற்பெயரை களங்கப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com