மாற்றுத்திறனாளிகள் நலத்துறை விருதுகள் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை விருதுகள் அறிவிப்பு!

மிழக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக ஒவ்வொரு வருடமும், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வுக் குழு மூலம் கண்டறிந்து அவர்களுக்கு முதலமைச்சர் கரங்களால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் மாற்றுத் திறனாளிகள் நலனைக் கருத்தில்கொண்டு செயல்படுபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கான விருதுகள் ஆகஸ்ட் 15, 2023 அன்று சுதந்திர தின விழாவில் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக அரசாணை இன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த விருதுகள் ஆறு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விவரம்:

1. மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக அரும்பாணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், 25,000 ரூபாய் ரொக்கப் பரிசு, மற்றும் சான்றிதழ். இந்த விருது மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் வழங்கப்படும்.

2. மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், 50,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்.

3. மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.

4. மாற்றுத் திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலை வாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.

5. மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளர் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.

6. சிறந்த மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.

மேற்கண்ட விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை, ‘மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர், எண் 5, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை சென்னை-5’ என்ற முகவரியில் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் இருந்து பெற்று, பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் 26.6.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடமோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கான விருதுகளை சுதந்திர தின விழா நிகழ்வில் தமிழக முதலமைச்சர் கரங்களால் வழங்கப்படும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com