நவ15ம் தேதிக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்!

நவ15ம் தேதிக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்!
Published on

வேளாண்மை நலத்துறை அமைச்சர் . எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சம்பா பருவத்தில் பயிர்க் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் வரும் 15ம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,”நவம்பர் 15-ம் தேதிக்கு முன்பு மழை பொய்த்தால், குறுகிய கால நெற்பயிர் ரகங்களான ஆடுதுறை 45, 53, 56, 57, கோ 51. அம்பை 16 போன்ற ரகங்களை நேரடி விதைப்பு முறையில் பயிரிடலாம்.

பருவமழை பொய்த்தால், குறுகியகாலப் பயிர்களான பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களை, மார்கழி மாதத்திற்குப் பின் பட்டத்தில் சாகுபடி செய்யலாம்.

தற்போது, நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்களில் வறட்சி ஏற்படும் பட்சத்தில், வறட்சியைத் தாங்கும் தன்மையை ஏற்படுத்தும் பிங்க பிக்மெண்ட்டட் ஃபேக்கல்டேடிவ் மெத்தைலோ ட்ரோஃப் என்ற உயிரினக் காரணியை ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி என்ற வீதத்தில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

நிலத்தடி நீரை (கிணறுகள், உறைக் கிணறுகள், ஆழ்துளை குழாய்க் கிணறுகள்) தேவைக்கேற்றவாறு, சிக்கனமாக விவசாயிகள் பயன்படுத்திடக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com