இனி ‘A’ For Apple Retail Store.

இனி ‘A’ For Apple Retail Store.

னது முதல் சிlலரை விற்பனைக் கடையை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதுவும் மும்பையில் திறக்க உள்ளது. இது மும்பையில் உள்ள அம்பானி குடும்பத்திற்கு சொந்தமான ஜியோ வேர்ல்ட் டிரைவ் என்ற வணிக வளாகத்தில் திறக்கப்படவுள்ளது. 

அதான் ஏற்கனவே இந்தியாவில் பல இடங்களில் istore-கள் இருக்கிறதே பின்பு ஏன் இதை முதல் ஆப்பிள் ஸ்டோர் என்று கேட்கிறீர்களா? ஏற்கனவே இருப்பவை அங்கீகாரம் பெற்று பிறரால் இயக்கப்படும் சில்லரை விற்பனைக் கடைகளாகும். ஆனால் தற்போது அமையவிருக்கும் Apple Retail Store ஆனது, ஆப்பிள் நிறுவனமே சொந்தமாக வைக்கும் விற்பனைக் கடையாகும். 

இதுதான் இந்தியாவிலேயே முதல் முதலாகத் திறக்கப்பட உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனைக் கடை. இந்த புதிய ரீடைல் ஷாப்பிற்கு ஆப்பிள் BKC என பெயரிடப்பட்டுள்ளது. மும்பையிலுள்ள ஜியோ வேர்ல்ட் ட்ரைவ் மாலில் அமைக்கப்பட்டு, மும்பைக்கே தனித்துவமான காளி பீலி டாக்ஸி என்ற கலையால் காண்போரை ஈர்க்கும்படியாக அமைந்துள்ளது.

ஐபோன், ஐபாட், டேப்லெட், மேக் பர்சனல் கம்ப்யூட்டர், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் டிவி, மென்பொருட்கள், டிஜிட்டல் மீடியா பிளேயர்கள், மற்றும் மூன்றாம் தரப்பு உதிரி பாகங்கள் உட்பட்ட பல்வேறு விதமான ஆப்பிள் தயாரிப்புகளும் இந்த கடையில் விற்பனை செய்யப்படும். இதை எப்போது திறக்கப் போகிறார்கள் என்ற சரியான தேதி இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் ஏப்ரல் மாத இறுதிக்குள் திறக்கப்படும் என பலர் நம்புகிறார்கள். ஜியோ வேல்ட் டிரைவ் மாலில் 22,000 சதுர அடிக்கு மேல் கொண்ட தளத்தில் இந்த முதல் ஆப்பிள் ஸ்டோர் உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும் தனது இரண்டாவது சில்லறை விற்பனைக் கடையை புதுதில்லியில் அமைந்துள்ள செலக்ட் சிட்டிவாக் மாலில் 12000 சதுர அடி பரப்பளவில் ஆப்பிள் நிறுவனம் அமைக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இது வரும் ஜூன் 2023இல் திறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் வித்தியாசமான முறையில் தனது ஸ்டோரை டிசைன் செய்துள்ள ஆப்பிள் நிறுவனம், புது தில்லியில் என்ன டிசைனில் ஆப்பிள் ஸ்டோரை உருவாக்கும் என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர்.  

கடந்த சில காலாண்டுகளில் பல இ-காமர்ஸ் தளங்களில், ஆப்பிள்  ஐபோன்களின் விலை நம்ப முடியாத அளவுக்கு குறைக்கப்பட்டு விற்பனையானதால், பிரீமியம் பிரிவில் ஆப்பிள் பொருட்களின் சந்தை வளர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் பொருட்களின் சில்லறை விற்பனைக்குக் கிடைத்த உந்துதலால், வரும் காலங்களில் ஆப்பிள் ஸ்டோர்கள் இந்தியாவில் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. 

இதனால் இந்தியாவில் ஆப்பிள் பொருட்களின் சந்தை மேலும் விரிவடையும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com