இனி Disney+Hotstar இலவசம். சந்தாதாரர்கள் மகிழ்ச்சி.

இனி Disney+Hotstar இலவசம். சந்தாதாரர்கள் மகிழ்ச்சி.

2023 ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்பு செய்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தை தவிடுபொடி ஆக்கியது ஜியோ சினிமா. தற்போது ஜியோ சினிமாவின் பாணியையே கையில் எடுத்துள்ளது டிஸ்னி + ஹாட்ஸ்டார். 

பொதுவாக OTT தளங்கள் எந்த அளவுக்கு சலுகைகள் வழங்குகிறார்களோ அந்த அளவுக்கு அவர்களுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கையும், சப்ஸ்கிரைபர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனலாம். ஒரு OTT தளம் கொடுக்கும் சலுகைகளைப் பொறுத்து எந்த தளத்துக்கு வேண்டுமானாலும் பார்வையாளர்கள் மாறிக் கொள்வார்கள். இதன் காரணமாகவே லட்சக்கணக்கான பயனர்கள் வருடாந்திர சப்ஸ்கிரைப்ஷன் எடுக்காமல், ஒரு மாதமோ அல்லது மூன்று மாத பிளான்களையே தேர்வு செய்து OTT தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். 

அந்த வரிசையில், 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்பு செய்து, ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தின் லட்சக்கணக்கான சப்ஸ்கிரைப்ர்களை ஒரே மாதத்தில் தன்வசமாக்கியது ஜியோ சினிமா. இதனால் மிகப்பெரிய வீழ்ச்சியடைந்த Hotstar தனது சப்ஸ்கிரைபர்களை மீட்டெடுக்க பல தந்திரங்களை மேற்கொண்டு வருகிறது. 

தற்போது முகேஷ் அம்பானியின் ஜியோ சினிமா இலவச ஒளிபரப்புத் திட்டத்தையே ஹாட்ஸ்டார் OTT தளமும் கையில் எடுத்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கிறது. இதில் இந்தியா உட்பட மொத்தம் பத்து அணிகள் பங்கேற்கின்றன. 48 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் இதில் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கவிருக்கிறது. இந்த போட்டிகள் அனைத்தையும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் சந்தா செலுத்தாமல் இலவசமாகப் பார்த்துக்கொள்ளலாம் என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ஏற்கனவே ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரைப் வைத்துள்ள அனைவருக்கும் பொருந்தும். 

ஐபிஎல் போட்டிகளை 2027 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பு செய்ய, ஜியோ சினிமா நிறுவனமே ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் எப்படியாவது இழந்த சப்ஸ்க்ரைபர்களை மீட்கவேண்டி, பல சலுகைகளை அறிவிக்க ஹாட்ஸ்டார் நிறுவனம் காத்துக் கொண்டிருக்கிறது. இதனால் சந்தா கட்டணம் கூட குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

"இந்தியாவில் பல முன்னணி OTT தளங்களோடு ஒப்பிடுகையில், வளர்ந்து வரும் OTT தளமாக Hotstar முன்னணியில் இருக்கிறது. எனவே வரும் ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மூலமாக, அதிகப்படியான பார்வையாளர்களைக் கவரும் வகையில் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்" என டிஸ்னி + ஹாட்ஸ்டார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இம்மாதிரியான OTT தளங்களுக்கு இடையேயான போட்டி சப்ஸ்கிரைபர்களை தற்போது மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல் போட்டி முடிந்ததும் அமைதியாய் இருந்த கிரிக்கெட் ரசிகர்கள், இதனால் உற்சாக மடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com