இனி கேரளா பள்ளிகளில் சானிடரி நாப்கின் இயந்திரம் கட்டாயம்!

இனி கேரளா பள்ளிகளில் சானிடரி நாப்கின் இயந்திரம்  கட்டாயம்!

கேரளாவில் பெண்கள் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரம் கட்டாயமாக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.இந்தியாவில் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரங்களை நிறுவிய முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்கள் பள்ளிகளிலும் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரம் கட்டாயமாக்கப்படும் எனவும் பள்ளிகளில் நாப்கின் அகற்றும் முறையும் உறுதி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பெண்கள் பள்ளிகளில் இந்த வசதியை பொதுக் கல்வித் துறை வழங்கும். இது குறித்து ‘குப்பையில்லா கேரளா’ திட்டத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 26, 2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

 சானிட்டரி நாப்கின்கள்
சானிட்டரி நாப்கின்கள்

இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றான கேரளா முற்போக்கு மனநிலையை கொண்டது எனலாம். கேரளாவில் மாதவிடாய் சுகாதாரம் பற்றி மிகவும் தேவையான சரியான செய்தியைப் பரப்புவதற்காக, மாநில அரசு 'ஷீ பேட்' திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ், தனியார் மற்றும் அரசுத் துறைகளை உள்ளடக்கிய கிட்டத்தட்ட 1,845 மேல்நிலைப் பள்ளிகளில் விற்பனை இயந்திரங்களை நிறுவ 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது ரூ. 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கேரள மாநில மகளிர் மேம்பாட்டுக் கழகம் (KSWDC) மூலம் செயல்படுத்தப்படுகிறது, இது சானிட்டரி நாப்கின்கள், அலமாரிகள் மற்றும் எரியூட்டிகளை விநியோகிக்கும்.

இந்த லட்சிய திட்டம் குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “மாதவிடாய் சுகாதாரத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமை உண்டு. அரசின் 'ஷீ பேட்' திட்டம், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆரோக்கியமான மற்றும் சுத்தமான சானிட்டரி பேட்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த அப்புறப்படுத்தும் அமைப்பு மற்றும் பயன்படுத்தப்பட்ட பேட்களுக்கான டிஸ்டில்லரிகள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com