இனி வெயில் அதிகரிக்கும்.... ஏஸி ரிமோட்டை தேடி வையுங்க!

இனி வெயில் அதிகரிக்கும்.... ஏஸி ரிமோட்டை தேடி வையுங்க!

மார்கழி மாதம் முடிந்த பிறகு தற்போது பிப்ரவரி மாதம் முடியும் நிலையிலும் மூடுபனி தமிழகத்தில் நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது பனி குறையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இனி மாசி மாதம் தொடங்கிய நிலையில் பனி குறைந்து வெப்பம் அதிகரிக்கும்.

இந்த மூடுபனியால் காலை வேளைகளில் வாகனங்களில் பயணிப்பது சவாலாக இருந்தது. சில இடங்களில் பனி மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்துகளும் ஏற்பட்டன. பலருக்கு பனியால் உடல்நல குறைபாடுகளும் ஏற்பட்டன. இதனால் மருத்துவமனையில் சளி, இருமல் தொந்தரவுகளுக்காக அதிக அளவிலான மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் இனி தமிழகத்தில் குளிர் குறைந்து படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும். தமிழகம் மற்றும் புதுவையில் இரு நாட்களுக்கு வெயில் அதிகமாக காணப்படும் . அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 37.4 டிகிரி பதிவாகியிருந்தது. சென்னை, கடலூர், கன்னியாகுமரி, கரூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்,

குறைந்தபட்ச வெப்பநிலையாக நாமக்கல்லி 15 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. வரும் 23 ஆம் தேதி முதல் வரும் 26 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இனி வரும் காலம் கோடைகாலமாதலால் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும். வரும் எப்ரல், மே மாதங்களில் வெயில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com