இனி விப்ரோ ஊழியர்கள் அலுவலகம் வரவேண்டும்!

வீட்டில் இருந்து வேலைமுறை நீக்கம்!
விப்ரோ நிறுவனம்
விப்ரோ நிறுவனம்
Published on

சமீபத்தில் விப்ரோ நிறுவனம் தனது அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்குக் கட்டாயம் வர வேண்டும் என அறிவித்தது.

விப்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் வாரத்தில் 3 நாட்கள் அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று இந்திய அலுவலகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அறிவித்துள்ளது.

மேலும் அக்டோபர் 10 ஆம்தேதி முதல் இந்தியாவில் இருக்கும் அனைத்து விப்ரோ அலுவலகங்களும் வாரத்தில் 4 நாட்கள் திறந்திருக்கும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் வாரம் முழுவதும் வீட்டில் இருந்து வேலை செய்யப்படும் முறை முற்றிலுமாக நீக்கப்பட்டு உள்ளது.

விப்ரோ ஊழியர்கள்
விப்ரோ ஊழியர்கள்

இந்த அறிவிப்பு விப்ரோ நிறுவன ஊழியர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக சில வருடங்களாக வீட்டிலேயே இருந்து பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு இந்த வாரத்தில் 3 நாள் அழைப்பு என்பது சற்று சுமையாக உள்ளது. பெரும்பாலான ஐடி ஊழியர்கள் சொந்த ஊரில் இருந்து பணிபுரிவதால் இனிமேல் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என்பது கொஞ்சம் சிரமம் என கருதுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com