TN Certificates on WhatsApp
Birth certificate

இனி ‘வாட்ஸ் ஆப்பில் ‘பிறப்பு சான்றிதழ்’ பெறலாம்?...எப்படி தெரியுமா..?

சென்னையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இனி WhatsApp மூலம் பிறப்பு சான்றிதழ் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
Published on

சென்னை மாநகராட்சி எல்லையிலுள்ள குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை, பெற்றோர்கள் இனி வாட்ஸ்அப் எண் மூலம் பிடிஎஃப் வடிவில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்...

சென்னை பெருநகர மாநகராட்சி (Greater Chennai Corporation) பொதுமக்களின் வசதிக்காகப் பல்வேறு சேவைகளை எளிமைப்படுத்தி வரும் நிலையில், தற்போது ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியை அரங்கேற்றி உள்ளது.

சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை (Birth Certificate) பெற இனிமேல் எங்கும் அலைக் கழிய வேண்டிய தேவையில்லை. தங்களது மொபைல் போனில் உள்ள வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மூலமாகவே எளிதாக பிடிஎஃப்(PDF) வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.

மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் விபரம், நேரடியாக மாநகராட்சிக்கு அனுப்பபட்டு 15 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் சான்றிதழ் https://www.chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

வாட்ஸ் அப் செயலி மூலம் எப்படி பெறலாம்?

பெற்றோர் தங்களது மொபைல் போனில் 94450 61913 என்ற சென்னை மாநகராட்சியின் பிரத்யேக வாட்ஸ்அப் உதவி மைய எண்ணைச் சேமித்து, அதிலிருந்து ‘ஹாய்’, ‘வணக்கம்’ அல்லது ‘பிறப்பு சான்றிதழ்’ என தகவல் அனுப்பித் தங்களது கோரிக்கையைப் பதிவு செய்ய வேண்டும்.

பெற்றோர் தங்களது விவரங்களை உள்ளிட்ட சில நொடிகளிலேயே, அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் போனுக்கு பிடிஎஃப் (PDF) வடிவில் பிறப்புச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.

இதனைப் பொதுமக்கள் எவ்வித கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சில சமயங்களில் பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு இடைத்தரகர்களிடம் பொதுமக்கள் அதிக பணம் செலவழிக்கு வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் முறைகேடுகள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்பதுடன் ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

logo
Kalki Online
kalkionline.com