இனி ஆதார் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கலாம்!

ஆதார் கார்டு
ஆதார் கார்டு
Published on

நாட்டில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தின்கீழ் பயோ மெட்ரிக் அங்கீகாரத்துடனான ஆதார் எண்ணை பயன்படுத்தி, நாட்டில் உள்ள எந்த நியாயவிலைக் கடைகளிலும் பொருட்கள் வாங்க முடியும் என்று, மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

நாட்டில் "ஒரே நாடு ஒரே ரேஷன்’ அட்டை திட்டத்தின் மூலம் புலம் பெயர்ந்தவர்கள் உட்பட அனைத்து பயனாளர்களும் தங்களுக்கான மாதாந்திர உணவு தானியங்களை, நாட்டில் உள்ள எந்த நியாயவிலைக் கடைகளிலும் ரேஷன் அட்டையை பயன்படுத்தி வாங்க முடியும். மேலும், பயோ மெட்ரிக் அங்கீகாரத்துடனான ஆதார் எண்ணை பயன்படுத்தியும் உணவு தானியங்களை பெற முடியும்.

இது குறித்து பண்பலை வானொலி மற்றும் ரயில் நிலையங்களில் ஒலி - ஒளி காட்சிகள், பதாகைகள் உள்ளிட்டவை மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 13 மொழிகளில் இடம் பெற்றுள்ள ‘மேரா ரேஷன்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 20 லட்சம் பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர். ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் கீழ் தற்போது மாதந்தோறும் சராசரியாக 3.5 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com