இனி ட்விட்டரிலும் பணம் சம்பாதிக்கலாம்.

இனி ட்விட்டரிலும் பணம் சம்பாதிக்கலாம்.
Published on

ட்விட்டர் நிறுவனமானது அதன் கிரியேட்டர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைகளில் தீவிரமாக இறங்கிவருகிறது. மேலும் தங்களை பின் தொடர்பவர்களுக்கு சந்தாக்களை வழங்க அனுமதிக்கவும் முடிவு செய்துள்ளது. இதனால் பயனர்கள் தங்களுக்கு கிடைக்கும் சந்தாக்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்க மட்டோம் எனவும், கிடைக்கும் முழு தொகையையும் படைப்பாளிகளே வைத்துக்கொள்ளலாம் என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது. 

எலான் மஸ்கின் இந்த புதிய திட்டம் மூலமாக, கிரியேட்டர்கள் ட்விட்டரில் தங்களின் உள்ளடக்கத்தை பணமாக்க முடியும். ஏற்கனவே ட்விட்டர் ப்ளூ என்ற அம்சத்தைப் பயன்படுத்தி, பணம் செலுத்தினால் யார் வேண்டுமானாலும் 'வெரிஃபைட் அக்கவுண்ட் டிக்' பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார். இதன் அடுத்த நிலையாக ட்விட்டரில் பதிவேற்றப்படும் கட்டுரைகள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு இனி பணம் கிடைக்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதற்கு முதலில் நீங்கள் மாதம் 8$ டாலர்கள் செலவழித்து ட்விட்டர் ப்ளூ சந்தாதாரராக மாற வேண்டும். 

ஏற்கனவே இதுபோன்ற கிரியேட்டர்களுக்கு பணம் செலுத்தும் அம்சம் பல சமூக ஊடகங்களில் இருந்து வருகிறது. அதில் பெரும்பாலானவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை ஈட்டி வருகிறார்கள். குறிப்பாக தற்போது Youtube தளத்தில் லட்சக்கணக்கான கிரியேட்டர்கள் உருவாகி விட்டார்கள். வீட்டை விட்டு பத்து அடி நடந்து சென்றால் கூட அதை Vlog என படம் பிடித்து யூட்யூபில் பதிவேற்றி பணம் சம்பாதிக்கிறார்கள். மேலும் பேஸ்புக்கிலும் காணொளி பதிவேற்றி பணம் சம்பாதிக்கும் முறை தற்போது வேகமெடுத்து வருகிறது. அதேபோல இன்ஸ்டாகிராமிலும் ரிலீஸ் போடுபவர்களுக்கு பல ஸ்பான்சர்ஷிப் வாயிலாக பணம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கிறது. 

யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களோடு ஒப்பிடுகையில், ட்விட்டரில் கிரியேட்டருக்கு வரும் வருமானம் குறைவாகவே இருப்பினும், இது ஆரம்பம் மட்டுமே. கண்டென்ட் கிரியேட்டர்கள் தனது சந்தாதாரர்கள் மூலமாக வரும் பணத்தை முதல் ஓராண்டுக்கு முழுவதுமாக அவர்களே பெற்றுக்கொள்ளலாம். ஆண்ட்ராய்டு மற்றும் IOS பயன்பாட்டாளர்களுக்கு எவ்விதமான கட்டணங்களும் விதிக்கப்படாது. 

ஓராண்டுக்குப் பிறகு ஆண்ட்ராய்டு மற்றும் IOS இயங்குதளங்களில் ட்விட்டர் ப்ளூவைப் பயன்படுத்தும் கண்டென்ட் கிரியேட்டர்களிடம், அவர்களுக்குக் கிடைக்கும் சந்தாதாரர் கட்டணத்திலிருந்து 30 சதவீதத்தை ட்விட்டர் நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்த வேண்டும். மீதமுள்ள 70% பயனாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என எலான் மஸ்க் தனது ட்வீட்டில் தெரிவித்தார். 

Twitter நிறுவனத்திற்கு எலான் மஸ்க் பொறுப் பேற்றதிலிருந்தே பல தயாரிப்பு மற்றும் நிறுவனம் சார்ந்த மாற்றங்களை செய்து வருகிறார். அதன் வரிசையில் தற்போது கிரியேட்டர்களுக்கு பணம் செலுத்தும் அறிவிப்பு பலருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com