உச்சநீதிமன்ற தீர்ப்பால் பின்னடைவு இல்லை! ஓ.பன்னீர் செல்வம் கருத்து!

உச்சநீதிமன்ற தீர்ப்பால் பின்னடைவு இல்லை!  ஓ.பன்னீர் செல்வம் கருத்து!
Published on

உச்சநீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நடந்து முடிந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெற்றிப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த தீர்ப்பிற்கு பிறகு சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது இது குறித்து கருத்து தெரிவித்த ஒபிஸ் ” அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவோம். பொதுக்குழுவைத் தான் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிடவில்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை வைத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தை நாட முடியாது. பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் எதுவும் கூறப்படவில்லை. மேலும் பொதுக் குழு தீர்மானங்கள் நடைமுறைக்கு வரவில்லை. காகிதத்தில் மட்டுமே உள்ளது.

தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்கிற நிலை எங்களுக்கு இல்லை . முறுபடியும் உயர் நீதிமன்றத்தை நாடுவோம். மக்களிடம் சென்று நீதி கேட்போம். தர்ம யுத்தத்துக்கு நல்ல முடிவு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். நிச்சயம் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் 50 ஆண்டு காலம் போராடி காப்பாற்றிய கட்சியின் சட்ட விதிகளை காப்பாற்ற நாங்கள் போராடி வருகிறோம். அதிமுக எதற்காக தொடங்கப்பட்டதோ அதை நோக்கி நாங்கள் பயணித்து வருகிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com