கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி போட்டி!

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி போட்டி!

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கர்நாடக தேர்தல் நடைபெறும் சூழலில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நிலையில் தினமும் புது செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாடு அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் கர்நாடகத் தேர்தலிலும் தங்கள் பலத்தை நிரூபிக்க போராடுவார்கள் எனக் கருதப்படுகிறது.

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனையடுத்து, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய பிரதான கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் பா.ஜ.க கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியும் கடும் எதிர்ப்புகளுடன் தேர்தலை எதிர்கொள்கிறது. பசவராஜ் பொம்மை ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

கர்நாடகாவைப் பொறுத்தவரை ஜெயலலிதா காலத்திலிருந்து அ.தி.மு.க கட்சிக்கு கர்நாடகாவிலும் நிர்வாகிகள் இருந்துவருகின்றனர். ஜெயலலிதா காலத்திலிருந்து புகழேந்தி அ.தி.மு.க கர்நாடகா மாநில பொதுச்செயலாளராக புகழேந்தி இருந்துவந்தார்.

கர்நாடகாவில் ஒருபுறம் காங்கிரஸும், பா.ஜ.கவும் மோதிக் கொண்டால் மற்றொரு புறம் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வம் மோதிக் கொள்கின்றனர். கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் இரு தரப்பினரும் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளனர்.

இந்தநிலையில், நேற்று அ.தி.மு.க சார்பில் கர்நாடகாவில் தமிழர் அதிகம் வாழும் பகுதியான புலிகேசி நகர் பகுதியில் போட்டியிடும் வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கர்நாடகா மாநில அ.தி.மு.க அவைத் தலைவர் டி.அன்பரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்தநிலையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கர்நாடகாவில் மூன்று தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளது. புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியனும், கோலார் தங்க வயல் பகுதியில் அனந்த ராஜ்ஜும், காந்தி நகர் தொகுதியில் குமாரும் போட்டியிடுகின்றனர் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com