ரிமோட் வாக்களிப்பிற்கு எதிர்ப்பலைகள்!

ரிமோட் வாக்களிப்பிற்கு எதிர்ப்பலைகள்!
Published on

இந்தியாவில் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், வாக்களிக்க ஏதுவாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் புதிதாக 'ரிமோட் வாக்குப்பதிவு எந்திரத்தின்'(EVM) மாதிரி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பிறமாநிலத்ததில், புலம் பெயர்ந்தவர்கள்,  அங்கிருந்தே எளிதாக வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதன் செயல் விளக்கம் மற்றும் ஆலோசனைக் கூட்டம், 'constitution club of india' , அரங்கில், தலைமை தேர்தல் அதிகாரி,  'திரு.ராஜுவ் குமார்' அவர்களின் தலைமையில் 16-01-2023 அன்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் 7 தேசியக்கட்சிகள் மற்றும் 58 மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

தி.மு.க.சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சனும், காங்கிரஸ் சார்பில் மூத்தத்தலைவர் திக்விஜய் சிங்கும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா அவர்களும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மேஹா மொய்த்ரா மற்றும் பா.ஜ.க.சார்பில் பூபேந்திர யாதவ் அவர்களும் கலந்துக் கொண்டனர்.அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் சார்பாக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கனக ரத்தினமும், வழக்கறிஞர் வேல் பிரகாஷும் வந்திருந்தனர். அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தரப்பில்  யாரும் கலந்துக் கொள்ளவில்லை.



காலை 11 மணிக்குக் கூட்டம் தொடங்கியபோது, எதிர்க்கட்சிகள், ரிமோட் வாக்குப்பதிவிலுள்ள சந்தேகங்களை  தீர்த்த பின்பே செயல்முறை விளக்கம் நடைபெற வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள், தலைமை ஆணையரிடம் கோரிக்கை வைத்தன. எனவே முதலில் கட்சிகள் தங்கள் சந்தேகங்களைக் கூற, தலைமை தேர்தல் அதிகாரி திரு.ராஜீவ் குமார் அவர்கள் அனுமதி அளித்தார்.

புலம் பெர்ந்தவர்கள் யார்?யார் அவர்களை எவ்வாறு வகைப்படுத்துவீர்கள் என்பதை தெரிவித்து விட்ட பின்பே,ரிமோட் வோட்டிங் மெஷின் சம்பந்தப்பட்டக் கேள்விகளைக் கேட்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

ரிமோட் வாக்கு இயந்திர ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க. தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. எதிர்க்கட்சிகளும் ஆட்சேபம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து  சந்தேகங்களைத் தீர்க்கும் விதமாக, பின்னர் ஒரு நாளில் செயல்முறை விளக்கக்கூட்டம் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

அவரவர் கருத்துகளைத் தெரிவிக்கக் கட்சிகளுக்கு, ஜனவரி 31  வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருமாதக் காலத்திற்கு, அதாவது பிப்ரவரி 28 வரை, மேலும் கால அவகாசம் வழங்கப் பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டத்தில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற முடிவிற்கு, தி.மு.க.சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர், திரு.வில்சன் அவர்கள்,கடும் எதிர்ப்பினைப் பதிவிட்டார்.

பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, விரைவில் ரிமோட் வாக்கு இயந்திரம், நல்லபடியே அமுல் படுத்த, தேர்தல் ஆணையம் செய்யும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

     
             

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com