பாட்னா ரயில் நிலையத்தில் விளம்பரங்களுக்குப் பதிலாக 3 நிமிடங்களுக்கு ஒளிபரப்பான ஆபாச கிளிப் விவகாரம்!

பாட்னா ரயில் நிலையத்தில் விளம்பரங்களுக்குப் பதிலாக 3 நிமிடங்களுக்கு ஒளிபரப்பான ஆபாச கிளிப் விவகாரம்!
Published on

பாட்னா ரயில் நிலையத்தில் ரயில்களில் ஏறுவதற்கு காத்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகள், 10 நடைமேடைகளில் உள்ள அனைத்து டிவி திரைகளிலும் மூன்று நிமிடங்களுக்கு ஆபாச கிளிப் ஒளிபரப்பப்பட்டதால், பரிதாபமான சூழ்நிலையை எதிர்கொண்டனர்.

மார்ச் 19 அன்று பாட்னா ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்களில் பொருத்தப்பட்டிருந்த டிவி திரைகளில் வழக்கமான விளம்பரங்களுக்குப் பதிலாக ஆபாசப்படம் ஒளிபரப்பப்பட்டதைக் கண்டு பயணிகள் ஆச்சரியமடைந்தனர்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள்ளது.

காவல்துறை அறிக்கையின்படி, இந்த சம்பவம் ஞாயிறு காலை 9.30 மணியளவில் பிளாட்ஃபார்ம் எண் 10 இல் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஒளிபரப்பான ஆபாச காட்சி ரயில் நிலையத்தின் மின்னணு திரையில் கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் திரையிடப்பட்டது.

பீகார், தானாப்பூர் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் வீடியோக்கள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பும் ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகள் உடனடியாக அவர்களைத் தொடர்பு கொண்டு ஒளிபரப்பை நிறுத்தினர்.

இந்த சம்பவத்தை உறுதி செய்த தானாபூரில் உள்ள டிஆர்எம் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பிரபாத் குமார் கூறியதாவது: இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளோம். நிறுவன அதிகாரிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம். இது முற்றிலும் சகிக்க முடியாத ஒரு சம்பவம். இந்த நிறுவனத்தை நாங்கள் இனி பிளாக் லிஸ்ட்டில் சேர்ப்போம்." என்றார்.

இதேபோன்ற சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலையும் அதே ரயில் நிலையத்தில் நடந்ததாக அங்கத்திய வட்டாரங்கள் தெரிவித்தன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com