2050 ஆம் ஆண்டுக்குள் வெள்ளி கிரகத்தில் மனிதர்களின் குடியேற்றம் அமைக்கப்படும் என்றும், அதற்கு முதற்கட்டமாக ஆயிரம் பேரை அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் டைட்டன் நிறுவனம் கூறியுள்ளது.
1912 ஆம் ஆண்டு பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை சுற்றுலா பயணிகள் பார்வையிட, 'தி ஓசியன் கேட்' என்ற நிறுவனம் 'டைட்டன்' என்ற பெயரில் நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கியது. இந்த நீர்மூழ்கிக் கப்பலில் முதன் முதலில் ஐந்து பேர் கொண்ட குழு தன் பயணத்தைத் தொடங்கினர். அந்த நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டன் தொழிலதிபர்கள் உட்பட, ஓசியன் கேட் நிறுவனத்தின் தலைவரும் பயணித்தனர். இந்த நீர்மூழ்கிக் கப்பல் பயணிக்கத் தொடங்கிய 2 மணி நேரத்திலேயே கட்டுப்பாட்டறையுடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து மாயமான நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணி 4 நாட்கள் தீவிரமாக நடந்தது. 96 மணி நேர தேர்தலுக்குப் பிறகு அந்த நீர்மூழ்கிக் கப்பல் அழுத்தம் காரணமாக வெடித்து சிதறியது தெரியவந்தது. அதில் பயணித்த ஐந்து பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது. இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து நடந்து ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், டைட்டன் நிறுவனம் தங்களின் அடுத்தகட்ட டார்கெட்டை அறிவித்துள்ளது.
அதாவது வருகிற 2050 ஆம் ஆண்டுக்குள் வெள்ளி கிரகத்தில் மனிதர்களை குடியேற்றப் போவதாகவும். அதற்காக ஆயிரம் பேரை அனுப்பி வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வெள்ளி கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்றுவது ஓசியன் கேட் நிறுவனத்தின் கனவுத்திட்டம் என்று அதன் இணை நிறுவனர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்கு 'ஹியூமன்ஸ் டு வீனஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அந்த கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான நிரந்தர சூழல் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.