ஒடிசா ரயில் விபத்து விசாரணையில் எந்த பலனும் இல்லை - மம்தா பானர்ஜி!

ஒடிசா ரயில் விபத்து விசாரணையில் எந்த பலனும் இல்லை - மம்தா பானர்ஜி!

ஒடிசா ரயில் விபத்து விஷயத்தில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனின் விசாரணை ஆரம்பமாகியிருக்கிறது. அதே நேரத்தில் சி.பி.ஐ விசாரணையும் கோரப்பட்டு, நேற்று விசாரணையும் ஆரம்பமாகிவிட்டது. இது தவிர ஒடிசா மாநில காவல்துறையும் ஒரு குற்றவியல் வழக்கை பதிவு செய்திருக்கிறது.

தேசிய அளவில் ரயில் விபத்துகள் ஏற்பட்டால் ரயில் பாதுகாப்பு கமிஷன் விசாரணை நடத்துவது வழக்கம். ஒடிசா ரயில் விபத்தில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் தன்னுடைய விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்குள் சி.பி.ஐ தன்னுடைய விசாரணையை ஆரம்பித்துவிட்டது.

அதே நேரத்தில் ஒடிசா காவல்துறையும் ஒரு குற்ற வழக்கை பதிவு செய்திருக்கிறது. யார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது? குற்றத்தின் காரணம் என்ன? எந்த பிரிவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது? எந்த கேள்விக்கும் விடை தெரியவில்லை. வழக்கு விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ரயில்வே காவல்துறையை மீறி உள்ளூர் காவல்துறையால் எப்படி விசாரணை நடத்தமுடியும் என்பதும் தெரியவில்லை.

பத்து பேர் அடங்கிய சி.பி.ஐ குழு நேற்று சம்பவ இடத்திற்கு வந்தது. ஒரு மணி நேரம் இடத்தை ஆய்வு செய்த பின்னர் அருகில் இருந்த பாகாநகா பஜார் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றது. அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்களிடம் சி.பி.ஐ குழு விசாரணையை தொடர்ந்தது.

இந்நிலையில் சி.பி.ஐ விசாரணையால் எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை. விசாரணை முடிந்து என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நான் ரயில்வேத்துறையின் அமைச்சராக மூன்று முறை இருந்திருக்கிறேன். அப்போது இரண்டு பெரிய விபத்துகள் நடந்திருக்கின்றன. உண்மைகள் வெளிவரவேண்டும் என்பதற்காக இரண்டையும் பற்றி விசாரிக்க சி.பி.ஐ விசாரணை கோரினேன்.

ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸில் ஏற்பட்ட விபத்தை விசாரிக்குமாறு சி.பி.ஐக்கு அனுப்பினோம். 12 ஆண்டுகள் ஆன பின்னரும் விசாரணையில் எந்த முன்னேற்றமுமில்லை. சைந்தியா ரயில் விபத்தையும் விசாரிக்குமாறு சி.பி.ஐ குழுவை கேட்டுக்கொண்டோம். அது குறித்து விசாரித்த சி.பி.ஐயால் எந்த முடிவுக்கு வரமுடியவில்லை.

ரயில்வே துறையில் ரயில்வே பாதுகாப்பு அமைச்சகம் உள்ளது. விபத்துகளை பற்றி விரைவாக அவர்களால் மட்டுமே விசாரணை நடத்த முடியும். உண்மை எப்படியாவது வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். என்ன நடந்தது என்பதை மூடி மறைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

உயர்மட்ட விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் ஏனோ சி.பி.ஐ விசாரணையை விரும்பவில்லை. ரயில் விபத்தின் பின்னணியில் சதி இல்லாதபோது எதற்காக சி.பி.ஐ விசாரணை தேவை என்று கடந்த இரண்டு நாட்களாக கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com