ஒடிசா ரயில் விபத்து சிபிஐ விசாரணை துவங்கியது!

ஒடிசா ரயில் விபத்து சிபிஐ விசாரணை துவங்கியது!

நாட்டையே உலுக்கிய ஒடிசாவில் நடந்த ரெயில்கள் மோதலுக்கு மனித தவறு காரணமா? அல்லது சிக்னல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமா? என்பது குறித்தான சிபிஐ விசாரணை இன்று முதல் துவங்குகிறது. மேலும் ரெயில்வே உயர்மட்ட குழு ஏற்கனவே தொழில் நுட்ப கோளாறு தொடர்பாக ஆய்வு நடத்தி சேகரித்த தகவல்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்துள்ளது.

பெரிதும் அதிச்சிக்குள்ளாகிய ஒடிசா மாநிலத்தில் 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 1,175 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் சுமார் 900 பேர் சிகிச்சை முடிந்து அனுப்பப்பட்டு விட்டனர். மீதமுள்ளவர்களுக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ரெயில்வே உயர்மட்ட குழு நடத்திய முதல் கட்ட விசாரணையில், "பகா நகர் பஜார் ரெயில் நிலையத்துக்கு முன்பு பிரதான ரெயில் பாதையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் தொடர்ந்து செல்ல பச்சை நிற சிக்னல் வழங்கப்பட்டது. திடீரென அது மாற்றப்பட்டதால் பக்கவாட்டில் உள்ள மற்றொரு தண்டவாளத்துக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியது என்று தெரிவிக்கப்பட்டது.

CBI
CBI

இதையடுத்து ரெயில்கள் மோதலுக்கு மனித தவறு காரணமா? அல்லது சிக்னல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமா? என்ற கேள்விக்குறிகள் எழுந்துள்ளது. இந்த விபத்து குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், "விபத்தின் பின்னணியில் சதி வேலை இருக்கக்கூடும்" என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதில் உண்மையை கண்டு பிடிப்பதற்காக சி.பி.ஐ. விசாரணைக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் இதுவரை நடந்துள்ள பெரிய ரெயில் விபத்துக்கள் அனைத்தையும் ரெயில்வே உயர்மட்ட குழுதான் விசாரித்துள்ளது. தற்போதுதான் முதல் முறையாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. ரெயில்வே உயர்மட்ட குழு ஏற்கனவே தொழில் நுட்ப கோளாறு தொடர்பாக ஆய்வு நடத்தி சேகரித்த தகவல்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை இன்று தொடங்கினார்கள். 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான கோர சம்பவத்துக்கான விடையை தேடி இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com