ஓலா ஆட்டோவுக்கு பெங்களூருவில் தடை!

ஓலா ஆட்டோ
ஓலா ஆட்டோ

ர்நாடகாவில் பெங்களூரு உட்பட அனைத்து ஊர்களிலும் ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்கள் வாடகை கார்கள் வழங்கும் சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த சேவையில் ஆட்டோக்களையும் இணைத்தன.

ஆனால் இந்த ஆட்டோ சேவையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடம் புகார் எழுந்ததையடுத்து ஓலா, ஊபர், ரேபிடோ மூலம் வாடகை கார்களை மட்டுமே இயக்க வேண்டும் எனவும், ஆட்டோக்களை இந்த சேவையில் ஈடுபடுத்துவது சட்டப்படி தவறு என அம்மாநில போக்குவரத்துத் துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

அந்த வகையில் கர்நாடகாவில் ஆன்லைன் செயலி மூலம் புக் செய்து இயக்கப்படும் வாடகை ஆட்டோ சேவையை நிறுத்துவதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது . இந்நிலையில் இன்று அக்டோபர் 10ம் தேதி திங்கட்கிழமை முதல் பெங்களூரு உட்பட கர்நாடகம் முழுவதும் ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் வாடகை ஆட்டோக்கள் இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசின் இந்த உத்தரவை மீறி ஆட்டோக்கள் இயக்கப்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com