உலகின் வயதான முதலை… 10 ஆயிரம் குழந்தைகளுக்கு அப்பா… ஒருகாலத்தில் லியோ… இன்று பார்த்திபன்!

World's Oldest Crocodile
Crocodile
Published on

உலகின் மிக வயதான முதலையின் வரலாற்றைக் கேட்டீர்கள் என்றால் அவ்வளவு மாஸாக இருக்கும். ஆனால், இப்போது அந்த முதலை 10 ஆயிரம் குழந்தைகளுடனும் 6 மனைவிகளுடனும் அமைதியாக குடும்பத்தை நடத்தி வருகிறது.

உலகில் பல விலங்குகள் இருந்தாலும், முதலையைப் பார்த்தாலே சிலருக்கு பயம்தான். அதுவும் சற்று வயதான முதலை என்றால், கரடு முரடாக ஒரு டெரர் பீஸ் போல் காட்சியளிக்கும். அப்படியென்றால், முதலைகளிலேயே வயதான முதலையின் தோற்றத்தைப் பற்றி சொல்லவா வேண்டும்? இந்த முதலையின் பெயர் ஹென்றி. 700கிலோ எடை மற்றும் 16 அடி நீளம் கொண்ட இந்த முதலைக்கு 123 வயதாகிறது. ஆம்! 1900ம் ஆண்டு பிறந்த மனிதனை உண்ணும் நைல் முதலையாகும்.

ஆப்பிரிக்கா நாடான போட்ஸ்வானாவின் ஒகாவாங்கோ டெல்டாவில் தான் ஹென்றியின் பயணம் தொடங்கியது. ஹென்றி 1900ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பிறந்தது. தனது இளம் வயதிலேயே கோரப் பற்களை வைத்துக்கொண்டு தரையில் வந்தால், பயப்படாத மக்களே அங்கு இல்லை. மக்கள் எளிதாக இதனை அடையாளம் கண்டுக்கொள்வார்கள். இந்த முதலையைப் பார்த்தாலே நடுக்கத்தில் என்ன செய்வது என்று அறியாமல் விழிப்பார்கள் மக்கள். இதனைக் கண்டு பயப்பட இதன் தோற்றம் மட்டும் காரணமல்ல. இது அவ்வளவு பெரிய காரியங்களையும் செய்யும். இது மனிதர்களை வேட்டையாடி சாப்பிடும். குறிப்பாக குழந்தைகளை வேட்டையாடுவதை ஒரு வழக்கமாக செய்து வந்த ஹென்றி முதலையின் அட்டூளியம் அளவுக்கடந்து சென்றது.

இதையும் படியுங்கள்:
அன்பில் மகேஷிற்கு எதிராக எழும் குரல்கள்… உடனே ராஜினாமா செய்ய சொல்லும் நெட்டிசன்கள்!
World's Oldest Crocodile

பின்னர், அந்த மக்கள் சர் ஹென்றி நியூமன் என்ற வேட்டைக்காரனிடம் உதவிக்கு நாடியுள்ளனர். முதலையைக் கொல்ல வந்த இவர், அதனைப் பார்த்ததும் மனம் இறங்கி அதனை உயிருடன் பிடித்துச் சென்றார். இந்த வேட்டைக்காரன் நியூமன் ஹென்றியின் நினைவாகவே அந்த முதலைக்கு ஹென்றி என்று பெயரிடப்பட்டது.

இதையடுத்து கடந்த 30 ஆண்டுகளாக ஹென்றி தென்னாப்பிரிக்காவின் ஸ்காட்பர்க்கில் உள்ள க்ராக்வோர்ல்ட் (Crocworld) பாதுகாப்பு மையத்தில் வசித்து வருகிறது. தனது வாழ்நாளில் நூறுக்கும் மேற்பட்டவர்களை கொன்ற ஹென்றி, தற்போது அமைதியாக இங்கு வாழ்ந்து வருகிறது. 6 மனைவிகள் மற்றும் 10 ஆயிரம் குழந்தைகளுடன் தனது நேரத்தை செலவிட்டு அமைதியாக வாழ்ந்து வருகிறது.

ஒருகாலத்தில் லியோ தாஸ்… இப்போது பார்த்திபன்…!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com