ஆம்னி பேருந்து கட்டணம் : உரிமையாளர்கள் நிர்ணயம்

ஆம்னி பேருந்து
ஆம்னி பேருந்து
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஆம்னி பேருந்து கட்டணத்தை அதன் உரிமையாளர்கள் ஓரிருநாளில் நிர்ணயம் செய்வார்கள் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். பண்டிகை காலங்களின்போது ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், போக்குவரத்து துறை ஆணையர் இல.நிர்மல்ராஜ் உள்ளிட்ட அதி காரிகள் பங்கேற்றனர். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் குளிர்சாதனம், படுக்கை வசதிகொண்ட பேருந்துகள் அதிகமாக உள்ளன. இதைவிட கூடுதல் வசதியை எதிர்பார்ப்பவர்கள் மட்டுமே ஆம்னி பேருந்துகளை நாடிச் செல்கின்றனர்.

கட்டண உயர்வு
கட்டண உயர்வு

அரசு பேருந்துகள் சேவை நோக்கில் இயக்கப்படுகின்றன. இரண்டுக்குமான கட்டணங்களை ஒப்பிடுவது தவறு. மேலும், அந்த பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்துவதால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவது இல்லை. அவர்கள் அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர் என அமைச்சர் கருத்து தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மற்ற நாட்களைவிட பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் தான் பேருந்துகள் நிரம்புகின்றன என்ற கருத்தை உரிமையாளர்கள் முன்வைத்தனர். எனவே, மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும், உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையிலும் ஓரிருநாளில் கட்டணத்தை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிர்ணயிப்பதாக கூறியுள்ளனர். குடுத்தால் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுப்போம் எனவும் அமைச்சர் கூறினார்.

logo
Kalki Online
kalkionline.com