’போராட்டம் வாபஸ்’: ஆம்னி பேருந்துகள் இனி வழக்கம் போல் இயங்கும்!

 ஆம்னி பேருந்து
ஆம்னி பேருந்து
Published on

கேரளாவுக்கு கடந்த 18 நாட்களாக இயக்கப்படாமல் இருந்த ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுவதாக அறிவிப்பு.

அரசு பேருந்து என்றாலும் தனியார் பேருந்து என்றாலும் பெரும்பாலான பொதுமக்கள் நாடுவது பேருந்து பயணங்களே. நகரின் அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கு வசதியாகவும் அவரவர் நிதி நிலைக்கு தகுந்தவாறு பேருந்துகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியும் இருப்பதால் பேருந்துகளின் பயன்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில்தனியார் சாலைத்தடப் பேருந்துகளைக் பொதுவாக Omni Bus என அழைப்பார்கள்.அரசு பேருந்துகளுக்கு மாறாக, இவை டிராவல்ஸ் நிறுவனங்கள் மூலம் இயங்கும்.

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கான தனியார் ஆம்னி பேருந்து சேவை கடந்த 20 நாட்களாக கேரளா மாநிலத்தால் விதிக்கப்பட்ட விதிமீறிய அபராதங்கள், permit-related சிக்கல்கள் , மாநில வரிகள், நிதிசுமை உள்ளிட்ட காரணங்களால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது. கேரளா மட்டுமின்றி கூடுதலாக சாலை வரி விதிக்கப்பட்டதன் காரணமாக கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன.

போராட்டத்தின் அடிப்படை காரணமான அதிகமான “அளவில்லா / கூடுதல் அரசு வரிகள்” (Road Tax / State Tax) குறித்து உரிமையாளர்கள் மத்திய அரசு வெளியிட்ட ‘All India Permit’ (ஏ.ஐ.டி.-பாஸ்) இருக்கும்போதும், பல மாநிலங்கள் — குறிப்பாக பிற மாநிலங்களில் இருந்து வரும் பஸ்களுக்கு — மீண்டும் வழித்தட வரி (state-level road tax / special tax) விதிப்பதாக கூறியிருந்தனர். இதனால் “permit system”த்தின் நோக்கம் முழுமையாக செயல்படவில்லை என்கிறார்கள் உரிமையாளர்கள்.

மேலும் கேரளா மற்றும் மற்ற மாநிலங்கள், Omni-பஸ்களை நிர்பந்தமாக விதிக்கப்பட்ட அபராதங்கள் , "permit violation” என்ற காரணத்தில் தடுத்து வைக்கவும், hefty fines விதிக்கவும் தொடங்கின. ஆனால் நடைமுறை ரீதியில் இவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறுகின்றனர் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்

இது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அமைப்பு( All Omni Bus Owners and Operators) தமிழ்நாடு அரசு மற்றும் சில பிற மாநில அரசுகளிடம் சில கோரிக்கைகளை நிர்ணயித்து நடத்திய போராட்டத்தின் காரணமாக பயணிகள் அசௌகரியம் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நஷ்டம் ஆகியவற்றை பரிசீலித்த தமிழக அரசு உத்தரவின் பேரில் மற்ற மாநிலங்களின் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் தமிழகத்திலிருந்து செல்லும் பேருந்துகளுக்கு கூடுதல் வரி விதிக்கக்கூடாது என்றும் மற்ற பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வை ஏற்படுத்தி தருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்துள்ளதை அடுத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதாக அறிவித்தது.

போராட்டம் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ஆம்னி நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு மீண்டும் இயக்கப்படும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தற்போது அறிவித்தது. கேரளாவுக்கு செல்லும் பக்தர்கள் பாதிக்காத வண்ணம் மாநிலங்களுக்கு இடையே ஆம்னி பேருந்துகள் சேவை இன்று முதல் இயக்கப்படும் என்று கூறப்படுவது பயணிகளிடையே குறிப்பாக சபரிமலை சீசனான தற்போது கேரளா செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
இனி மருந்துக் கடைகளில் QR CODE கட்டாயம் - மத்திய அரசு அதிரடி..!
 ஆம்னி பேருந்து

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com