பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஒரே நாளில் 9 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஒரே நாளில் 9 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!
Published on

ஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையாக பக்ரீத் விளங்குகிறது. இந்தப் பண்டிகையின்போது, ஆட்டு இறைச்சியையும், சிலர் அதில் சமைக்கப்பட்ட உணவையும் ஏழை எளியோருக்குக் கொடுத்து உபசரிக்கும் வழக்கம் இஸ்லாம் சமூகத்தினரிடம் உள்ளது. இந்தப் பண்டிகை வரும் 29ம் தேதி இஸ்லாமியர்களால் கொண்டாடப்படவிருக்கிறது. இந்தப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக, வியாபாரிகளும், இஸ்லாமியர்களும் முன்னதாகவே ஆடுகளை வாங்கி வைத்துக்கொள்ளத் தொடங்கி உள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் வாரச் சந்தைகளில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக களைகட்டி வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி இன்று ஒரு நாளில் மட்டும் 9 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. முன்னதாக, இந்த வாரச்சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்கிச் செல்ல வியாபாரிகளும், இஸ்லாம் சமூகத்தினரும் குவிந்தனர். இன்று அதிகாலை 5 மணிக்கே தொடங்கிய இந்த வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

அதைப்போலவே, புதுக்கோட்டை, விருத்தாசலம் மற்றும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் கூடிய வாரச்சந்தைகளிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டு, விற்பனை அமோகமாக நடைபெற்றது. எடை மற்றும் அளவைப் பொறுத்து 1000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை ஆடுகள் விலை போனதாகக் கூறப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் வழக்கத்துக்கு மாறாக விலை சற்று அதிகமாகப் போனாலும் மக்கள் சந்தோஷமாகவே ஆடுகளை வாங்கிச் சென்று இருக்கிறார்கள். ஆடுகளுக்கு விலை அதிகமாகக் கிடைத்ததால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று ஒரு நாளில் மட்டும் ஒவ்வொரு ஆட்டுச் சந்தைகளிலும் பல லட்ச ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com