‘ஒரே ராணுவம்; ஒரே சீருடை திட்டம்’ ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது!

‘ஒரே ராணுவம்; ஒரே சீருடை திட்டம்’ ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது!
Getty Images

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. அன்று முதல், ‘ஒரே ராணுவம்; ஒரே சீருடை‘ என்ற திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டி வந்தது. கடந்த மாதம் நடைபெற்ற கமாண்டர் மாநாட்டில் அனைத்துத் தரப்பினர் கருத்துக்களையும் கேட்டு, ராணுவ வீரர்களின் சீருடையை மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ‘பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் டைரக்டர் ஜெனரல் ஆகிய உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகளுக்கு தலைக்கவசம், தோள்பட்டை, ரேங்க் பேட்ஜ்கள், சட்டை காலர் பேட்ஜ்கள், பெல்ட்கள் மற்றும் காலணிகள் ஆகியவை பொதுவானதாக இருக்கும். அதேபோல், லேன்யார்ட்ஸ் எனப்படும் கயிறை, ராணுவ அதிகாரிகள் இனி அணிய மாட்டார்கள்‘ என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேசமயம், கர்னல்கள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் அணியும் சீருடையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த ராணுவ சீருடை மாற்றத் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இது குறித்து ராணுவ வட்டாரங்கள் தரப்பில், 'ஒரே சீருடை அனைத்து மூத்த நிலை அதிகாரிகளுக்கும், பொதுவான ஒரு அடையாளத்தை உறுதி செய்யும், அதே நேரத்தில் நமது ராணுவத்தின் உண்மையான நெறிமுறைகளையும் பிரதிபலிக்கும். இந்த நடவடிக்கை ராணுவ அதிகாரிகளுக்கிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதுடன், அதிகாரிகளிடையே நல்ல ஒத்துழைப்பையும், இணக்கத்தையும் ஏற்படுத்தும்‘ என்று கூறப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com